nanrasithathu.blogspot.com

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.


ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.
சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்து கோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவு வலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.

மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண் வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில் செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.

நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமா பற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய் விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு டாஸ்மாக் தேடி போய் விடுகிறார்கள்.

உள்ளே இருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனித உறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்கு அதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில் குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

ஆண்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம் வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்க வாய்ப்புண்டு.

nandri--
http://counselforany.blogspot.com...

சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....




சுதந்திரம்....

ஒரு ஆணுக்கு சுதந்திரம்???
ஒரு ஆணுக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்து யார்??
காந்தியா இல்லை ஜெயலலிதாவா??
ஆம் ஜெயலலிதாவே.
டாஸ்மாக் நாயகி!!! சுதந்திர தேவி!!!
அவிங்க இலேன்னா டாஸ்மாக் இல்ல... சுதந்திரம் இல்ல...

ஒரு ஆணுக்கு சுதந்திரம் என்பது அவன்
பேச்சுக்கு, நடத்தைக்கு,
கட்டுபாடற்ற குடும்ப உறவுக்கு,
தொல்லை இல்லாத பணியிடம் மற்றும் பல பல..
இவை அனைத்தும் கிடைகிறதா என்றால்?? அது தான் இல்லை....

ஒரு ஆணின் மனது இன்னோர் ஆணுக்கு தான் தெரியும்(பெண்ணுக்கும் தெரியும்னு நீங்க நினைக்கிறது mind voicela கேக்குது)
தினமும் ஒருத்தன் குடிக்க போறான்னு சொல்ற மக்களோ குடும்பமோ அவர் ஏன் குடிக்க போறார்னு பாக்குறாங்களா???
இல்லை அவங்களயுடைய கண்ணோட்டம் தினமும் குடிச்சிட்டு வரார்னு தான்...

ஒரு டாஸ்மாக் பார்ல பொய் உக்காந்தா தான் வர ஒவ்வொரு ஆண் மகனின்
உள்ள குமுறல்கள் கேக்கமுடியும்,
அதான் பாரதி அன்னைகே பாடி வச்சிட்டான்
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம் "
"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்னு"
அப்பவே அவர் அவ்ளோ குடும்ப விரக்தியிலே அன்று டாஸ்மாக் இல்லாத்தினால கஞ்சாவின் போதைல எழுதினது
குடும்ப பாரம், குடும்ப அடிமைத்தனம் இதிலிருந்த சிறிது நேரம் விடுபடவே ஆண்கள் டாஸ்மாக் செல்கிறார்கள் என்பது ஏன் கருத்து இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா இப்போ சில பெண்களையும் பாக்கமுடிது அவங்களும் சுதந்திர காற்றை பருக வந்திருகாங்கோ..

சோம பானம், சுரா பானம்னு சொல்றமாதிரி இன்றைய சுதந்திர நாளில் இருந்து இதை சுதந்திர பானம்னு அழைக்கணும்னு உங்கள் எல்லாரயும் சுதந்திரமா கேட்டுக்குறேன்
சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....
---------சந்திரானந்தா

என்ன புள்ள செஞ்சே நீ…

சைட் அடிச்சிருக்கியா…இந்த வார்த்தையை யாரிடமாவது கேட்டு பாருங்கள்..கொஞ்சம் வெட்கித்தான் போவார்கள்..”என்னங்க..இதப்போய் எல்லார் முன்னாடியும் கேட்டுகிட்டு..” என்று திருப்பி கேட்பவர்கள் உண்டு..நண்பன் ஒருவனிடம் கேட்டால் சொல்லுவான்..”மச்சி..சைட் அடிக்காதவன் அரை மனிதன்..” சைட் என்பது “பார்வை” என்று பொருள்படும் என்று ஆரம்பித்தால், போயாங்க..என்று எல்லாரும் சைட் அடிக்கப்போய்வுடுவீர்கள் என்று தெரியும்…

சைட் என்ற வார்த்தை எப்போது தொடங்கி இருக்கவேண்டும் என்று கேட்டால், நம் கல்வெட்டுக்களில் இதற்கான அடையாளம் இருந்ததாய் தெரியவில்லை... எனக்கு தெரிந்தவரை, நான் சின்னபிள்ளையாக இருந்தபோதே, இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.”என்ன மாமூ..சைட்டா..”, “வாடா மச்சி, சைட் அடிச்சிட்டு வருவோம்..”, “மச்சான்..அவ என்ன சைட் அடிக்கிறாடா.” கல்லூரி மாணவர்களி பேவரைட் டயலாக்காக இருந்தது “சைட் அடிப்போம்..” என்ற வார்த்தை..என்னிடம் கேட்டால், சைட் அடிக்கத் தெரியாதவன் குருடன் என்பேன்..

எதிரில் அழகான, அல்லது உங்களை கவரக்கூடிய வகையில் ஒரு பெண் நடந்து சென்றால், ஆட்டோமேட்டிக்காக, உங்கள் பார்வை அந்த பெண்ணின் பக்கம் சென்றால், அதுதான் “சைட்..” நன்றாக கவனிக்கவும்.அதோடு நிறுத்திக்கொண்டால்தான் “சைட்…” இதற்கு மேல் சென்று “எக்ஸ்க்யூஸ்மி…வாட் இஸ் டைம் தி நவ்..” என்று ஆரம்பித்தால், அது “சைட்” டின் அடுத்த கட்டம்..கல்யாணம் ஆனவர்கள், இந்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பது, உடல், பொருள் ஆவிக்கு நலம்..

என் தமிழ்வாத்தியாரிடம் கேட்டால், “போடா தம்பி…சங்ககாலத்திலேயே, சைட் பத்தி விரிவாக சொல்லியிருக்காங்க” என்பார்..தலைவி நடந்து செல்லும்போது, சைட் அடிக்காத தலைவர்களே இல்லையாம்..புராணத்திலேயே சைட் அடித்துள்ளார்கள் என்றால், நாயர் கடையில் டீயும்,வடையும் அடிக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று, பல பொழுதுகள் வியந்ததுண்டு..

திரைப்படங்களில் சைட்டுகள் இல்லாமல், காதல் படங்களே இருக்காது..காதல் என்பது சைட்டோடுதான் ஆரம்பிக்கும்..நாயகி அடிக்கும் முதல் சைட்டுலேயே, எங்கிருந்து வருமோ தெரியவில்லை, நாயகனுக்கு லவ்வு பிச்சுக்கிட்டு வரும். என்னைக் கவர்ந்த திரைப்படத்தில் வந்த ஒரு சைட், காதலுக்கு மரியாதை படத்தில், ஷாலினி, டாக்குடரு விஜய்யை பார்த்து அடிக்கும் சைட்டுதான்..கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் காதல், இவையெல்லாம் கலந்து ஷாலினி ஒரு பார்வை பார்ப்பாரே…யாத்தே..அந்த நேரம் பார்த்து நம்ம மொட்டை சார், “விழியில் விழுந்து, இதயக்கதவு.” என்று ஒரு ட்யூன் போட, அந்த சைட்டே, அதகளமாக இருக்கும்..

பொதுவாக ஆண்கள் மட்டும்தான் சைட் அடிப்பார்களா..பெண்கள் சைட்டு அடிக்க மாட்டார்களா, என்று கேட்டால், உங்களுக்கு இன்றைக்குதான் பல் முளைத்திருக்கிறது என்று அர்த்தம். பெண்கள் அடித்த சைட்டுகள் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கியதும், அடக்கியதுமாய் பல வரலாறுகள் உண்டு. ராமன் வில்லை உடைக்க நடந்து போன்போது, சீதை அடித்த சைட் பற்றி, ஒரு பெரிய பாடலே உண்டு என்று கூறுவர்…”He is handsome” என்று சிம்பிளாக மேலை நாடுகளில் சொல்லிவிடுவர். ஆனால் அந்த வார்த்தையை சொல்லுவதற்கு, நம் கலாச்சாரம் போட்டுள்ள தடையே, பெண்ணடிமைத்தனம்.”அது என்ன, பொம்பளை தெருவுல நடக்கும்போது, தலை நிமிர்ந்து நடக்குறா..ஒருவேளை கேரக்டரு..” என்று சொன்ன கலாச்சாரத்தில் இருந்து சிறிது, சிறிதாக வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ஊர்ப்பக்கங்களில், இன்னும் பல திருவிழாக்கள், சைட்டுக்காகவே சிறப்புறுவதுண்டு..

சைட் என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற நிலை மாறி, “சைட் அடிப்பதற்காகவே, பல மால்களும், கபேக்களும்” கட்டப்பட்டு, வெற்றிகரமாக பணம் ஈட்டப்படுகின்றன. ஆனால், சைட் அடித்தலும், ஒரு அளவுக்குதான்.. பார்க்கும் பெண்ணை எல்லாம் சைட் அடித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுப்பாகி, சைட் இல்லாத தெருக்களில் நடக்க பயப்படும், சைட் அடிக்கமுடியாத பஸ்களில் ஏறமுடியாத நிலை ஏற்படும் என்ற பிரபல மனநல மருத்துவர் அவியிங்க ராசா உரைக்கிறார்..

சைட்டோ, கைட்டோ, “அவ அழகாக இருக்கா” என்பதோடு நிறுத்திக்கொள்வதே நலம்..”அவ என்ன பிரா போட்டிருக்கா..அவ சைஸ் என்ன” என்று அடுத்த கட்டத்திற்கு செல்வது, வக்கிரத்தின் வெளிப்பாடே..அப்படி வெளிப்பட்டால், அந்த சைட்டின் அழகே கேவலப்பட்டு, உங்கள் சைட் பறிபோகும் வாய்ப்பு உண்டு…அட..எங்க போறீங்க..சைட் அடிக்கத்தானே…


nandri--

nandri--

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

காதலை வென்ற காமம்..!

பெண்கள் விடயத்தில்
பெரும் "கலைஞரான"
முகாலய மன்னனுக்கு
மீண்டும் மீண்டும் பசி எடுத்தது!

குடலை நிரப்புவதற்கான
உணவுப்பசியல்ல இது...,
மாறாக
உடல் வேட்கை தணிப்பதற்கானது..!

கண்ணை கவரும் பெண்டிருக்கெல்லாம்
கணவனாக ஆசைப்பட்டான்..,
அவன் தலையில் இருந்த "முடி"
அரச நாட்டு அழகிகள் பலரை
அந்தப்புரத்தில் அலங்கரித்தது..!


சுவைத்து முடிந்தவுடன்
தூர வீசும் பழங்களால்
வீரிட்டு கிளம்பும் அவன் பசி
விரைவில் அடங்கிவிடுமா என்ன?

அரச உடை
அவன் தோல் போர்த்தியிருந்ததால்
அடுத்தவன் பெண்டிர் மீதும்
அவன் கண்கள் பாய முடிந்தது,
அவ்வாறே அகப்பட்டுக்கொண்டாள்
அபலை பெண் மும்தாஜ்;
காமம் கொண்டவனுக்காய்
தன் கணவனை இழந்தாள்!

முகாலயன் பசி போக்கியதால்
பதின்நான்கு கருவுற்று
பின்னொரு நாளில்
அவ்வுடலில் இருந்து பிரிந்தாள்!

பசி தீர்த்தவள்
பாதியிலே போனதால்
மன்னர் மனப்பிரமை கொண்டார்
மரணித்த தன் காமத்தை
காதல் என்ற பெயரில்
கல்லறையாக எழுப்பினார்..!

காமத்தை வென்றவன்
காதல் செய்யான் என்றுணர்த்தும்
ஷஜகானின் அடையாளமாய்
தாஜ்மகால்..!

புதன், 3 ஆகஸ்ட், 2011

யெளவனமான நிலையில் ஏழு ...

இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வித யெளவனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன். கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.

”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”

ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.

ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.

சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?

தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.

”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.

”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.

காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.

”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”

இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?

மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”

யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?

இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள். இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.

பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.

மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

:

:

:

:

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.