nanrasithathu.blogspot.com

செவ்வாய், 28 ஜூன், 2011

காதல் கணவன்!!!!!!!

காதல் கணவன்!
* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!

* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!

* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?

* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...

* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...

* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...

* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...

* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...

* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...

* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...

* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!

* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!
— ஆர்.சத்யா ராஜசேகர்,

சுதா நீ என்றும்.......




சுதா நீ என்றும்

என் நினைவில் சதா...

நீ மரணிக்க வில்லை

எங்கள் நினைவில்

ஜெனித்து இருகிறாய்..



நீ குடிப்பதை பார்த்து

தண்ணியிலே கண்டம்

தண்ணியிலே கண்டம்

என்றார்கள்

அது கடல் தண்ணி

என்று தெரியாமல் போனதேன்???

ஆழியில் போனாலும்

உன் நினைவுகள்

அழிந்து போயிடுமா என்ன???



வாரத்தின் கடைசி

நாட்களில்மட்டும்

என்னைஅழைக்கவில்லை

உன்ஆயுசின்

கடைசி நாட்களில்தான்

என்னை அழைத்திருக்கிறாய்...



கடலுக்குவேண்டாதது

எல்லாம்துப்பிவிடுமாமே?

உன்னை மட்டும்

மூன்று நாள் "நீ"

புணர்ந்தது

போதும்என்று துப்பிவிட்டதோ??

கடலும் ஓர் தாசி தான்.....



கடவுளின் அற்புதங்கள்

குறைந்து விட்டதை

உன்விடயத்தில் கண்டேன்

இதுபோல் மரண செய்திகளாலும்

துக்க செய்திகளினால் மட்டுமே

இறைவன் பிழைத்த கொண்டிருக்கிறான்...



என் கூட பிறந்தசகோதிறர்கள் கூட

அண்ணா அண்ணா

என்றுஅழகாய் இப்படி

விளித்ததில்லை

என் சகோதிரனுக்கு நீ classmate .......

எனக்கு நீ glassmate ....

சற்று பொறு விரைவில்

இணைவோம் as a heaven mate ...


சுதா நீ என்றும்

எங்கள் நினைவில் சதா...

நீ மரணிக்க வில்லை

எங்கள் நினைவில் ஜெனித்து இருகிறாய்..

----சந்திரா

புதன், 22 ஜூன், 2011

கூரை


நேசித்த என் அருகில்

நீ இல்லை....

உன்னோடு நான் கரைத்த நிமிடங்கள்

என்னுள் கரையாத காவியமாய்....

நீயம் நானும் ஒற்றைக் கூரையில்

வாழ்ந்திட நினைத்தோம்....

ஆனால் - இப்பொழுது

நீ எங்கோ

நான் எங்கோ

இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு ஆறுதல்

ஆகாயம் என்னும் ஒற்றைக் கூரைக்கடியில் நாம் இருவரும்......




திங்கள், 20 ஜூன், 2011

நான் மீண்டும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்

காதல் ஒரு அருமையான உணர்வு, அதை அனுபவித்தவன் மட்டுமே உணரக்கூடிய இனிய வலி.

காதல் எதில் முடிந்தாலும் அது தரும் நினைவுகள் மட்டுமே சாஸ்வதம்.

நிறைய பேருடைய வாழ்க்கையை பல நேரங்களில் வயது வித்யாசமில்லாமல் காதல் தாக்கும், அடித்து வீழ்த்தும், என்ன தான் காதல் முடியுமிடம் காமம் என்று நிதர்சன தத்துவம் பேசினாலும், காதலுடனான காமத்தில் இருக்கும் சுவாரஸ்யமே வேறு.

அதனால் தான் காதலுக்கு வயது ஒரு தடையாய் இருப்பதில்லை.

பல நேரங்களில் செர்ரியின் தித்திப்பைப் போல் காதல் இருந்தாலும், கடைசியில் நெருடும் கொட்டையைப் துப்புவது போல் தான் தோல்விகளும்.

நான் மீண்டும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்

அறிவின் திறவு கோலான அப்பா happy FATHER'S DAY

குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு
குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள். அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது,பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.
தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள்.இளம் வயது பிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்த பின்தான் அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை உணர முடியும்.
இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நான்கு வயதில் குழந்தைகள் : ஆ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.

ஆறு வயதில் அதே குழந்தை : அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.

பத்து வயதில் : ' ஒ..அப்பா நல்லவர்தான்! ஆனால் ரொம்ப முன் கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்து கூட இவருக்கு தெரியவில்லையே! ஹூம்

பன்னிரெண்டு வயதில் : நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்....ஆனால் இப்போது ஏன்................. இப்படி ?

பதினாறு வயதில் : சே! அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை. ச்சீசீ....

பதினெட்டு வயதில் : இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு விபரமே தெரியாதவர்.

இருபது வயதில் : அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ?

இருபத்தைந்து வயதில் : என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா? எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்து கொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.

முப்பது வயதில் : (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்) : அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகளை சமாளித்தாரோ ( ஆச்சிரியம்)

முப்பத்தியைந்து வயதில் : ஒ மைகாட்! வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே !நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப்ப பாரு...வாலுங்க இது

நாற்பது வயதில் : ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசியமாகவே இருக்கின்றது.

நாற்பதைந்து வயதில் : எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டுவந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.

ஐம்பது வயதில் : இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்க்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.

ஐம்பதைந்து வயதில் : அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார். அவரல்லவா மனிதன்.

அறுபது வயதில் : ( கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த மனிதர் யாரும் இருக்கவே முடியாது.



இளைஞர்களே...இளைஞிகளே நாமும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து , குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்யமாட்டார்கள் என்பதையும் மனதில் வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.
நேரம் கிடைத்தால் கிழேயுள்ள வீடியோ க்ளீப்பை பாருங்கள் : ஆனால் பார்க்க தவறாதிர்கள். மனதை தொட்டு செல்லும் ,கண்ணிரை வரவழைக்கும்..பார்த்த பின்பு ஏதோ ஒன்றை இழந்த ஒரு உணர்வு தோன்றும்



இறுதியாக ஒரு வார்த்தை தந்தையர் தினம் என்பது குழந்தை உள்ளவர்களுக்கும் மட்டும் அல்ல. தந்தை ஸ்தானத்தில் இருந்து குழந்தைகளை கவனித்து வரும் எந்த ஆண்மகனுக்கும் உள்ள கொண்டாட்ட தினம் தான். அதனால் உங்களை தந்தை போல கவனித்து வரும் மாமா, அண்ணன், ஆசிரியர் மற்றும் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாம்.

புதன், 15 ஜூன், 2011

ஏற்றுக்கொள்!!!!!!!

காதலனாக வேண்டாம்,

காமுகனாக வேண்டாம்,

கணவனாக வேண்டாம்....உன்

குழந்தையாக ஏற்றுக்கொள்

நான் ஏங்குவதே

உன் அன்பிற்குதானே.......

---சந்திரா

என் வாழ்வு......

கனவில் வாழாதே

நிஜத்தில் வாழு

சொன்னாய் நீ...

நிஜத்தில் வாழ்வதைவிட

கனவில் வாழ்வது

எவ்வளவு சுகமென்பதை

நீ அறியா..

உன்னை பிரிந்த நாள் முதல்

வாழ்கை அப்பிடிதான்

இனிக்கிறது என் வாழ்வு....

--சந்திரா

நீ.........

மனிதனுக்கு

உணவு

உடை

உறைவிடம்

என்ற மூன்று "உ" கள்

முக்கியம்

எனக்கு நான்கு

உன்னையும்

சேர்த்து!!!!!

-----சந்திரா

திங்கள், 6 ஜூன், 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா?

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..!

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!



நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை,இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.

செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும்.

முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.

ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட!

இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.

பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.

மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.

'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்




நன்றி - அவள் விகடன்