nanrasithathu.blogspot.com

சனி, 25 செப்டம்பர், 2010

அண்ணா கொடுத்த பல்பு..!


1962. தமிழ்நாட்டுல இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்தது. டெல்லில இருந்தவங்க இங்க இருக்க சூழ்நிலை புரியாம, கண்டபடிக்கு பேட்டி குடுத்திட்டிருந்தாங்க.
அந்த காலத்துல தமிழ்நாட்டுல 'அண்ணா'ன்னு சொன்னா போதும், சின்னப் பசங்கலேந்து பல்லு போன கிழவனார்கள் வரைக்கும் அப்படியே ஒரு வேகம் தொத்திக்கும். அண்ணா எங்கயாவது பேசறார்னு தெரிஞ்சா, அந்த ஏரியாவே சும்மா கதிகலங்கும். கேக்கற எல்லாரையும் அப்படியே கட்டிப்போடற அளவுக்கு அண்ணாவோட தமிழ் தித்திக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை எல்லார் மனசுலேயும் நல்லா பதியற மாதிரி பேசறதுல அண்ணாவுக்கு நிகர் அண்ணா தான்.
டெல்லி பார்லிமெண்ட். இந்தி மொழியை தேசிய மொழியா ஆக்கறது பத்தி தீர்மானம் போட கூட்டம் கூடியிருந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ஒருத்தர் எழுந்தார். "இந்தியை தேசிய மொழியா அங்கீகரிக்க ஏன் எதிர்க்கறீங்கன்னு புரியலை.."ன்னு சொல்லி, தன் தரப்பு பாயிண்ட்டுகளை அடுக்கி வெச்சார். " சிம்பிள் லாஜிக். சின்ன குழந்தைக்கு கூட இது புரியும்.. இந்தியாவுல அதிகமான மக்கள் பேசற மொழி இந்தி.. அதனால இந்தி மொழிய தானே தேசிய மொழி ஆக்க முடியும்..!"னு முடிச்சார்.
அண்ணா எழுந்தார். "அதிகமான மக்கள் பேசற மொழி தான் தேசிய மொழியா இருக்கணும்னு சொல்றீங்க.. அப்படி பாத்தா, நம்ம நாட்டுல அதிகமா இருக்கற பறவை காக்கா தான். பின்ன ஏன் மயில் தேசியப் பறவையா இருக்கு...? நாட்டுல எலி இல்லாத மாநிலமே இல்லை.. அதனால இனிமே புலிக்கு பதிலா இனிமே எலியை தேசிய விலங்கா அறிவிச்சிடலாமா..?"ன்னு கேட்டதுக்கு பார்லிமெண்ட் கட்டடம் அதிர்ற அளவுக்கு கைதட்டினாங்க..
குல்லாகாரர் கேட்டார். "சரி.. அப்டீனா இந்தியர்கள் ஒருத்தொருக்கொருத்தர் பேச, இணைப்பு மொழியா எது இருக்கும்..?"
"ஏன்.. இப்ப தான் பள்ளிகூடத்துலயே ஆங்கிலம் சொல்லித் தரோமே.."
"ஆங்கிலம் சொல்லித் தரது உலகத்தோட தொடர்பு கொள்ள.. இந்தியர்களுக்குள்ள தொடர்பு கொள்ள ஒரு மொழி வேணும்.. இந்தியாவுல நிறைய பேருக்கு தெரிஞ்ச மொழி இந்தி.. அதனால கொஞ்சம் பேர் மட்டும் இந்தி கத்துகிட்டா போதும்.. அதுக்கு தான் இந்திய தேசிய மொழி ஆக்கணும்னு சொல்றோம்.."
"வெளிநாட்டுக்காரங்களோட பேச பயன்படற அதே ஆங்கிலத்தை, இந்தியாவுல இருக்கவங்ககிட்டயும் பேச பயன்படுத்திக்கலாம்.. எதுக்காக இன்னொரு மொழி கத்துக்கணும்..? உங்க வீட்ல ரெண்டு நாய் இருக்குன்னு வெச்சுக்கங்க.. ஒண்ணு பெரிசு.. ஒண்ணு சின்னது.. பெரிய நாய்க்காக ஒரு கதவும், சின்ன நாய்க்காக ஒரு கதவும் வெப்பீங்களா.. பெரிய நாய் வந்து போகுற கதவையே சின்ன நாயும் பயன்படுத்திக்கும் தானே.. ?ன்னாரு..
அறிஞர் அண்ணாவோட டைமிங் சென்ஸ், டெல்லிகாரங்களையே வாயடைக்க வெச்சிடுச்சு..!
மேற்கண்ட உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்தது. அண்ணா இவ்ளோ சூப்பரா ஆங்கிலம் பேசுவார்னு அங்க இருக்கவங்க ஒருத்தரும் எதிர்பாக்கலை. அண்ணா சொன்னார் : "I rarely speak English; But my English is not rare..

நன்றி- பல்பானாந்தா( விகடன்)

திங்கள், 20 செப்டம்பர், 2010

கவித கவித.....

இலவச நாயகனே.... இம்சை அரசனா மாறிடாதீங்க !

நிலம் பிடுங்கும் அரசுக்கு கோவணாண்டி நெத்தியடி !


முத்தமிழ் அறிஞர், முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு கோவாணாண்டி வணக்கம் சொல்லிக்கிறேன்.
'கடுதாசி எழுதியே காலகாலமா கட்சி நடத்துறவன் நானு. எனக்கே, அடிக்கடி கடுதாசி எழுதி கடுக்காய் கொடுக்கறானே இந்த கோவணாண்டி'னு யோசிக்கறீங்களா?
என்ன இருந்தாலும், 'உடன்பிறப்பே, உளுத்தம்பருப்பே'னு நீங்க வக்கிற பன்ச்சுக்கு முன்ன, என் கடுதாசியெல்லாம், கால் தூசுக்கு சமானம்முங்க. ஏதோ 'பஞ்சத்து ஆண்டி, பரம்பர ஆண்டி'னு சொல்வாங்களே அந்தக் கதைதான் எங்கதை. நானெல்லாம் ஏதோ வயித்துப்பாட்டுக்காக எழுதித் தொலைக்கிறேன். நீங்க இலக்கியத்தைக் கரைச்சி ஊத்தி எழுதி, படிக்கறவங்கள கிறங்கடிக்கற ஆளாச்சே!
அதுகிடக்கட்டும்... நானு தொடங்கிய பிரச்னைக்கு வாரேன்!


அய்யா... எல்லாருக்கும் 'இலவச நாயகன்'னு இருக்கற நீங்க, கோவணாண்டிகளுக்கு மட்டும் ஏன்யா... இம்சை அரசனா இருக்கீங்க. 'நான்தான் இலவச மோட்டார் கொடுக்குறேனே இன்னமும் என்ன?'னு கேக்குறது காதுல விழுகுது. ஆனா, இலவச மோட்டாரால எங்களைவிட மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குதான் அதிக லாபம்னு உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். கோவணாண்டிகளவிட, கோடீஸ்வரருங்களுக்குத்தான் எப்பவுமே உங்க மனசுல இடம்கிறதுல மாற்றுக் கருத்து இல்ல. என்ன நாஞ்சொல்றது சரிதானே? இப்பக்கூட பாருங்க... பசுமை விமான நிலையத் திட்டத்துலயும் (க்ரீன் ஃபீல்டு) அதைத்தானே நிரூபிச்சுக்கிட்டிருக்கீங்க.
'விமான நிலையம் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையானத் திட்டங்களைச் செயல்படுத்த, நிலத்துக்காக விவசாயிகளிடம் கையேந்துற நிலையிலதான் இருக்கறேன்'னு ஒரேயடியா வருத்தப்பட்டிருக்கீங்க.
வழக்கமா உதைச்சுதான் புடுங்குவோம்... இப்ப கெஞ்ச வேண்டியதாகிப் போச்சுதேனுதானே இப்படி அங்கலாய்க்கறீங்க? ஆமா, இதுல வருத்தப்படுறதுக்கு என்னங்க இருக்கு? இருக்கிறவங்ககிட்ட இல்லாதவங்க கையேந்தறது நியாயம்தானுங்களே!
நீங்க சொல்ற பசுமை விமான நிலையம், பல ஏக்கர்ல சிறப்புப் பொருளாதார மண்டலம், நாட்டு வளர்ச்சி, ரோட்டு வளர்ச்சி இதையெல்லாம் நாங்க மறுக்கல. ஆனா, அதெல்லாம் யாருக்குப் பலனக் கொடுக்கப் போகுது? வழக்கம்போல ஒங்களோட கூடிக் குலாவப் போற கோடீஸ்வரருங்களுக்குதானே.
அதுக்கு குறுக்க நிக்க நாங்க விரும்பல. தொழில் வளர்ச்சிக்கு நிலத்தைக் கொடுக்க மாட்டோம்னும் நாங்க சொல்லல. ஆனா, தேவையான நிலத்தை மட்டும் எடுங்க... அதுக்கு உண்டான சந்தை விலையை ஏமாத்தாம கொடுங்கனுதானே கேக்குறோம்.
ஆனா, ஏதோ ஒங்க வீட்டு நிலத்தை நாங்க வம்படியா பிடிச்சுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாப்புல இல்ல பேசறீங்க..! இதெல்லாம், சினிமா செட்டு கணக்கா திடுதிப்புனு சேர்ந்த சொத்து இல்ல. ஊரையடிச்சு உலையில போட்டு ரொம்ப பேரு வளைச்சுப் போட்டுருக்காங்களே... அப்படி சேர்த்தது இல்ல. எங்கப்பன், ஆத்தாவெல்லாம் வம்பாடுபட்டு உடம்பை உழைச்சு சேர்த்து வெச்சது.
அது சரி... அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்ககிட்ட நிலத்தை அபகரிக்க பார்க்கற நீங்க, ஏதாவது ஒரு கோடீஸ்வரருகிட்ட சந்தை விலையைவிட கம்மியா ஒரு துளி இடத்தையாவது வாங்கிடுங்க பாப்போம்.
சென்னையில ரோட்டை பெருசாக்கறதுக்காக ஓட்டல், சபா அது, இதுனு பலருக்கும் சந்தைவிலையைவிட அதிகமா கொடுத்து நிலத்தைக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கின கதையையெல்லாம் எங்கூரு இங்கிலிபீஸு வாத்தியாரு ஏற்கெனவே இங்கிலீஸு பேப்பர்ல படிச்சு எங்களுக்கு சொல்லியிருக்காருங்கோ!
ஆனா, 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி'ங்கற கதையா... எப்பவும் எங்க தலையில கைவெக்குறதுனா... எங்கிருந்துதான் ஒங்களுக்கெல்லாம் குஷி பிய்ச்சுக்கிட்டு வருமோ?
இப்ப நீங்க கூடத்தான் அண்ணாசாலையில ஒரு பெரிய இடத்த (அறிவாலயம்) வளைச்சு (காசு கொடுத்துதான்) போட்டு வெச்சு இருக்கீங்க. கோவணாண்டிக எல்லாம் சேர்ந்து, அரசு நிர்ணயிச்சு வெச்சு இருக்கற விலைக்கு அதைக் கேட்டா... கொடுத்துடுவீங்களா? அட, சந்தை விலைக்கே கேட்டாலும்தான் கொடுப்பீங்களா?
அந்த அறிவாலயத்துக்கு முன்ன, முறைப்படி மாநகராட்சிகிட்ட ஒப்படைக்க வேண்டிய இடத்தையே வளைச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பம்மாத்து காட்டிக்கிட்டிருக்கீங்கனு ஜெயலலிதாம்மா அப்பப்ப குத்திக்கிட்டே இருக்கறாங்க. கேட்டா, 'அண்ணா பார்க்கு'னு ஒரு போர்டைக் காட்டி புரூடா விட்டுக்கிட்டிருக்கீங்கனு நக்கல் அடிக்கறாங்க.
அதுமாதிரியெல்லாமா நாங்க சொல்லிக்கிட்டு திரியறோம்? உள்ள இடத்துக்கு, உரிய விலையைக் கொடுங்கணுதான் கேக்கிறோம். கொடுத்துட்டு போக வேண்டியதுதானே... அதை விட்டுட்டு திருவள்ளூர் போலீஸை விட்டு, எங்காளுகள அடிச்சு நொறுக்கறீங்க. அதுக்கு சப்போர்ட்டா, அம்மா, கறுப்பு எம்.ஜி.ஆரு, டாக்டருனு நாலு பேரு வந்து நின்னா... அவங்கள எதிர்த்து அறிக்கை விடுறது, கடுதாசி எழுதறதுனு கதையையே திசை திருப்பப் பார்க்கறீங்க?
அவங்கள்லாம் அரசியல்வாதிங்க. அரசியல் பண்ணணும்கிறதுக்காக இப்படியெல்லாம் கோஷம் போடுவாங்க... கொடி பிடிப்பாங்கதான். அவங்க மேல இருக்கற கோபத்துல, எங்க பொழப்புல கையை வெச்சுப்புடாதீங்க... சொல்லிப்புட்டேன்:
'பசுமை விமான நிலையத்துக்குதானே கேட்கிறேன். விமானம் பறந்தாதானே.. பெரிய பெரிய முதலாளிங்க பணப்பெட்டியோட வருவாங்க. தொழில் துவங்குவாங்க.. வேலைவாய்ப்பு பெருகும்'னு காரணம் சொல்லலாம். ஆனா, நெய்வேலியில இப்படி நெய் வடிய பேசிப்பேசி இடத்தையெல்லாம் வளைச்சுக்கிட்டு, அங்க இருந்த பூர்வக்குடிகளை நாடோடிகளா ஆக்கின கதை, எங்களுக்கு எத்தனைக் காலம் போனாலும் மறக்காதுங்கய்யா.
'அதைச் செய்தது நான் இல்லை கண்மணியே... காங்கிரஸ் எனும் கல் மனதுக்காரர்களின் கைவண் ணம்'னு டயலாக்கை எடுத்து விடுவீங்க!
ஆனா, காங்கிரஸு, கழகம், காவி இதெல்லாம் ஒரே குளத்துல ஊறுன மட்டைங்கறதத்தான் நாங்க கண்ணார பார்த்துக்கிட்டே இருக்கோமே!
'தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சினு கடிவாளம் கட்டுன குதிரையாட்டம் ஓரே திசையில ஓடி, முட்டு சந்துல முட்டிகிட்டு அமெரிக்கா நிக்குது'னு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியாரு தினம் தினம் கோணவாய்க்கா கரையில நின்னு கூவிக்கூவி படிக்கறத நாங்களும் கேட்டுக்கிட்டுதானே இருக்கோம்.
உள்ளூர்ல, உழவனுங்க இடத்தையெல்லாம் வளைச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைச்சு அந்நிய நாட்டு ஏவாரிகளுக்கு கொடுத்து அழகு பார்க்கறீங்க. ஆனா, உள்ளூருக்காரன் உசுரு வாழ, உருப்படியான விலையைக் கொடுனு கேட்டா கரிச்சிக் கொட்டறீங்க?
'தொழில் வளர்ச்சிக்கு நிலம் கேட்டா.. இத்தனை நொட்ட பேசுறதா?'னு நீங்க கரகரக்கிறது கேக்குதுங்கையா. தெரியாமத்தான் கேட்கிறேன், விவசாயமும் தொழில்தானுங்களே! ஒருவேளை உங்க ஆட்சியில அது 'பிச்சைக்காரங்களோட வேலை'னு மாத்திப்புட்டீங்களா?
'தொழில் வளர்ச்சி' முகமூடியை மாட்டிக்கிட்டு... நாலு ஏக்கருல குளியல் குளம், 5 ஏக்கருல கக்கூஸு, 50 ஏக்கருல விளையாட்டு திடல்னு விளைநிலத்த விரையமாக்காம, எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுங்க. அதை விட்டுட்டு தேவையைவிட தொண்ணூறு மடங்கு, தொள்ளாயிரம் மடங்குனு எதுக்காக கூடுதலா எடுக்கறீங்க?
இதோ... ஆக்ராவுல இருந்து, டெல்லி வரைக்கும் ரோடு போடுறதுக்காக ஒங்கள மாதிரியேதான் போலீஸைவிட்டு மிரட்டி நிலத்தைப் புடுங்கப் பார்த்தாங்க மாயாவதி அக்கா. ஆனா, எங்காளுக அசைஞ்சு கொடுக்கலனதும் துப்பாக்கியைத் தூக்கினாங்க. நாலு பேரைக் குருவி சுடற மாதிரி சுட்டும் போட்டாங்க. இப்ப, விவசாயிக கால்ல விழுந்து கெஞ்சிகிட்டு இருக்காங்க.
'கையகப்படுத்தற நிலத்துக்கு உரிய விலையைத் தர்றதோட, 33 வருஷம் வரைக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்னு கணக்குப் பண்ணி பணம் கொடுத்துட்டே இருப்போம். விவசாயி விரும்பாத நிலத்தை தொடமாட்டோம்'னு இறங்கி வந்திருக்காங்க அந்தக்கா!
அதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு, யோசிச்சுப் பார்த்து நல்லமாதிரியா ஒரு முடிவெடுங்க. 'ஒண்ணு மண்ணா பொறந்தோம்... ஒண்ணு மண்ணா வாழ்வோம்'னு நாங்களும் விட்டுக் கொடுக்கத் தயாரா இருக்கோம். அதைவிட்டு அதட்டியே காரியத்தை சாதிக்கப் பார்த்தா... கொஞ்ச நாளைக்கு முன்ன கம்யூனிஸ்டுங்கள மிரட்டறதுக்காக எடுத்துவிட்டீங்களே ஒரு 'மாவோயிஸ்ட் பூதம்'... அது உங்க புண்ணியத்துல நிசமாவே நம்ம ஊருல நடமாட ஆரம்பிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல!
உங்களுக்கென்ன.. உங்க வாரிசுங்க.. மூணாவது தலைமுறைங்கனு ஆளாளுக்கு நயன்தாரா.. தமன்னாக்கள ஆடவிட்டு காசு பண்ணுற வித்தைய கத்துக்கிட்டாங்க. இனி, ஒரு இருநூறு தலைமுறைக்குக்கூட ஒங்களுக்கு பஞ்சமிருக்காது.
எங்களுக்கு இருக்குறதே இத்துணூண்டு நிலம்தான்... அதையும் பிடுங்கிக்கிட்டா... வீதிக்கு வராம வேறென்ன செய்யமுடியும்?!
இப்படிக்கு
கோவணாண்ட
நன்றி-விகடன்

பல நேரங்களில்... பல மனிதர்கள்!

கலைஞர்களும் திருடர்களும்*****

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கலோரியை பற்றி உண்மைகள்

nandri-karurkirukkan.blogspot.com

கண்ணதாசன் - 25 (நன்றி - ஆனந்த விகடன்)

காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...
   

` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
   

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
   

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
   

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
   

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
   

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
   

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.
   

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
   

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.


 கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
    

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
   

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
   

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
   

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
   

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
   

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
   

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.
   

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
   

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
   

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.
   

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
   

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
   

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!


    `அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
   

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...


  `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
   அவன் பாட்டை எழுந்து பாடு!

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!

தமிழ் சினிமாவுல எத்தனையோ நடிகைங்க வந்து போறாங்க, சிலபேருதான் 3- 4 வருசமாவது தாக்குபிடிக்கிறாங்க. அதுலயும் சிலபேருதான் டாப்புக்கு வர்ராங்க. அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), வெவ்வேறு காலகட்டங்கள்ல டாப்ல இருந்தாங்க. நெறையப்பேரு டாப்புக்கே வரலன்னாக்கூட சொல்லிக்கிறபடியா நிறையப் படங்கள் நடிச்சாங்க. ஆன்ன நம்ம தமிழ் சினிமா வரலாறப் பார்த்தா (வரலாறு முக்கியம் அமைச்சரே!) சில நடிகைகளக் காரணமே இல்லாம நம்மாளுங்க புறக்கணிச்சிருக்கானுங்க. அப்புடி ஒரு லிஸ்ட்டுதான் இது.




இது அனிதா, சாமுராய் படத்துல விக்ரமோட ஜோடியா நடிச்சா. படத்துல ரொம்ப அழகா இருப்பா, அதுலயும் 'ஆகாயச்சூரியனை ஒற்றைச் சடையில் ஏந்தியவள்...'பாட்டுல அனிதாவ நாள்முழுக்கப் பாத்துக்கிட்டே இருக்கலாம். கொள்ளை அழகு. ஏனோ தெரியல, நம்ம காட்டானுங்களுக்கு அனிதாவோட அருமை தெரியாமப் போச்சு.



இது சாக்க்ஷி, இவளப் பத்தி நெறையப் பேருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு நெனக்கிறேன். இவளோட உடல்வாகு இருக்கே அதுக்கே கோடி கோடியா குடுக்கலாம் அவ்வளவு அற்புதமான உடலமைப்பு! ஆனா பாவம் புள்ளைக்கு நடிப்பே சுத்தமா வரல, பேரழகிங்கறதால மன்னிச்சு விட்ருக்கலாம். பாருங்க நம்ம பேரிக்கா தலையனுங்க இவளையும் ஓரங்கட்டிடானுங்க



இந்தப்புள்ள பேரு கீர்த்தி ரெட்டி, கொஞ்சம் பழைய ஆளுங்களுக்கு இவளோட கீர்த்தி பத்தி தெரிஞ்சிருக்கும். சும்மா சொல்லக்கூடாது, பேரழகின்னா அது இவதான். இவளோட முகவாக்கு இருக்கே அதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுங்க. இன்னிக்கி நம்ம லிஸ்ட்ல உள்ள பிகருங்கள்ல டாப்னா அது இவதான். நடிப்பையும் குறை சொல்ல முடியாது. உடல் அழகிலும் இவ பெரிய பேரழகி. நந்தினின்னு ஒரு படம் வந்துச்சு, அதுல ஸ்விம்சூட்ல வந்து கலக்கியிருப்பா, அப்புறம் பிரபுதேவாகூட ஒரு படம் வந்துச்சு நினைவிருக்கு வரைன்னு, நல்லாத்தான் இருந்தா. அல்டிமேட் பிகர்னா அது இவதான். கோணித்தலையனுங்க இவளையும் கண்டுக்காது விட்டுட்டானுங்கன்னா பாருங்களேன். தமிழ் சினிமா சரித்திரத்துல நமக்கெல்லாம் பேரிழப்புன்னா அது இதுதான்!



இது ஹீரா, எல்லாருக்கும் தெரிஞ்ச பிகரு. இதயம் படத்துல இவ சேலைகட்டி நடந்து வர்ர நளினத்த பாத்து இப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாளான்னு ஏங்காத ஆளே தமிழ்நாட்ல இருக்க முடியாது. சின்னப் பசங்கள்லாம் உடனே இதயம் படத்த DVDல பாருங்க இல்ல பெரிசுகள்ட்ட கேட்டுப் பாருங்க. தமிழ் நடிகைகளப் பொறுத்த வரைக்கும் கிளாஸ் பிகர் அப்படின்னா அது இவதான். இவ கணிசமான படங்கள்ல நடிச்சா, ரொம்பக் கவர்ச்சியாக் கூட நடிச்சா, ஆனா இதயம் படமே இதயத்துல நிக்கிரதாலே மத்தத எல்லாம் திரும்பிக்கூட பாக்க முடியல. இதயம் மாதிரி திரும்ப ஒரு படத்துல கூட இவள நம்ம டாஸ்மாக் வாயனுங்க யாருமே காட்டல, அதனால இவளையும் இந்த லிஸ்ட்டுக்கு கொண்டுவந்துட்டேன். நம்ம தறுதல அயோக்கியன் இவளையும் கொஞ்ச சீரழிச்சான். அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு?



இவ கஸ்தூரி, சொல்லவே வேண்டியதில்ல, இவள எதுக்கு இந்த லிஸ்ட்ல போட்ருக்கேன்னு சில பேருக்கு டவுட் வரலாம், என்னப் பொறுத்த வரைக்கும், கஸ்தூரியோட முழுப் பரிமாணத்தையும் யாருமே சரியாக் காட்டல, உங்களுக்குத் தெரியுமா, கஸ்தூரி மிஸ்.மெட்ராஸ் பட்டம் வாங்கின ஒரு புரபசனல் மாடல்னு? இவளோட உடல்வாகு இவளுக்குக் கெடச்ச ஒரு வரப்பிரசாதம். இத்தன வருஷத்துலயும் ஒரு இஞ்ச் சேஞ்ச் கூடத் தெரியல. இவளும் கேடுகெட்ட படத்துலயெல்லாம் நடிச்சிருக்கா (மிஸ்.மெட்ராஸ்னே ஒரு படம், பிட்டுப்படம் ரேஞ்சுக்கு வந்துச்சு, தெலுங்குல எடுத்தது, தமிழ்ல டப்பிங் பண்ணி, ரிலீஸ் பண்ணாங்க, அதுவும், பறங்கிமலை ஜோதி, ஓடியன் மணி மாதிரி தியேட்டர்கள்ல), இவளையும் தமிழ் சினிமா முழுமையா பயன்படுத்திக்கல, இன்னும் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாத்தான் இருக்கா, ஆனா பன்னாடைங்க விடமாட்டேங்கிரானுங்க.இப்போ நூற்றுக்கு நூறுன்னு ஒரு படத்துல நடிக்கிறான்னு கேள்விப்பட்டேன்! நம்ம பறக்கும்படைகிட்ட சொல்லி இப்போ இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கண்டுபிடிக்க சொல்லனும்!


டைப் பண்றதாவது ஈஸியா இருக்கும் போல, இந்தப் புள்ளைங்களுக்கு டீசன்ட்டா ஆளுக்கொரு படம் தேடி எடுக்குறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சுப்பா! அதுலயும் ஹீராவுக்கும், கஸ்தூரிக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!(படங்க நல்லா இல்லைன்னா மெயில்ல அனுப்புறேன், எல்லாம் விவகாரமா இருக்கு!)

இப்போதைக்கு இவ்வளவு போதும், என்ன உங்க கைவசம் ஏதாவது லிஸ்ட் இருக்கா? போட்டுத் தாளிச்சு உடுங்க!

நாமளும் பிரபல(!) ப்திவராயிட்டோம், கொஞ்சம் முன்மாதிரியா(?) ஏதாவது எழுதுவோமேன்னு தான் இப்பிடி...ஹிஹி..

nandri-shilppakumar.blogspot.com

சனி, 18 செப்டம்பர், 2010

உரிமை பேசும் எவரும் விடுதலைப் புலியே

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' - புலம் பெயர் தமிழீழ மக்களின் இன்றைய கனவு



இதுதான்! உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற இருக்கிறார்கள் இந்த அரசாங்கத்தில். அதற்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து முடிந்துவிட்டன. இந்த அரசாங்கத்தை எப்படி உருவாக்கலாம் என்ற சட்ட திட்டங்களை உருவாக்கும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் பொன் பாலராஜன்!

1980-களில், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய நிறுவனங்களின் ஆய்வுத் துறை நிபுணராக இருந்த இவர், 1990-ல் கனடாவுக்குக் குடி பெயர்ந்தவர். அங்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கணினித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். தமிழ் இலக்கியம், கவிதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுள்ள இவரை, ஆனந்த விகடனுக்காக 'காலம்' இதழின் ஆசிரியர் செல்வம் பேட்டி கண்டார்.

"தற்போது என்ன விதமான வேலையில் நாடு கடந்த தமிழீழ அரசு கவனம் செலுத்தி வருகிறது?"

"ஓர் அரசாங்கத்தை நிறுவும் பணிக்கு அடிநாதமாக இருக்கப்போகும் அரசியல் சட்டத்தினை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னதாக, அரசியல் சட்டமானது தயாராகிவிடும்.

இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள்பற்றிய விசாரணைகளுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அதற்குரிய பரப்புரைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, இடைக்கால நிர்வாக அவைத் தலைவர் உருத்திர குமாரன் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பில் உள்ளார்!"



"விடுதலைப் புலிகளின் அமைப்பு மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா? அப்படி உருவானால், அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசுடன் எவ்விதமான தொடர்பும் இருக்குமா?"

" விடுதலைப் புலிகள் என்றால் யார் என்பதற்கு முதலில் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு உரிய வரைவிலக்கணமும் தற்போதைய வரைவிலக்கணமும் முற்றிலும் வேறுபடுபவை. தற்போது விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திய ஒரு போராளிக் குழுவினர் அல்லர். 30 ஆண்டு காலப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வியலிலும், உணர்விலும், சொல்லப்போனால் அனைத்துமாகிக் கலந்துவிட்ட ஒரு நிலையினைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழர்களின் இறைமை, உரிமை என்பவை பற்றிச் சிந்திக்கும், செயற்படும் அல்லது பேசும் எவரையுமே தற்போதைய உலகம் ஒரு விடுதலைப் புலியாகவே காண்கிறது. அதாவது, தமிழ் மக்களின் விடுதலை உணர்வின் ஒருமித்த சிந்தனைதான் விடுதலைப் புலிகள். ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது உண்மைதான். ஆனால், விடுதலைக்கான தேவை இருக்கும் வரை போராட்டம் தொடரும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மக்களாட்சி நெறிப்படி அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் ஆகும். இதில் எந்தவிதமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடம் கிடையாது. ஆயுதப் போராட்டத்தினால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எமது கிராமங்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும்விட்டன. ஆகவே, வன்முறையற்ற அரசியல் போராட்டம் அனைத்து நிலைகளிலும் தொடரவே செய்யும்."

"நீங்கள் இந்திய அரசாங்கத்துடன், தமிழக அரசுடன் பேச நேர்ந்தால், எதற்கு முன்னுரிமை தருவீர்கள்?"

"எங்களது கோரிக்கைகள் இவைதான்..

ஈழத் தமிழர், இந்தியர் ஆகிய இருதரப்பினருக்கும் நீண்ட கால நன்மைகள் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான உறவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலக் கசப்பான அனுபவங்கள், எங்கள் எதிர்கால நல்லுறவைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது நல்லது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கும் ஆதிக்க மும், இந்தியாவின் பிராந்திய நலனை மிக மோச மாகப் பாதிப்பது மாத்திரம் அல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

யாழ்ப்பாணப் பகுதியில் சீனாவின் செல்வாக் கும் ஆதிக்கமும், மற்றைய இந்திய மாநிலங்களை விட தமிழகத்துக்குத்தான் அதிகப் பாதிப்பு ஏற்படுத்தும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நம் இனத்தின் தடுக்க முடியாத சாபக்கேடாகத் தொடர்கிறது.

தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் கைதாவ தும், சிறையில் இருப்பதும் இவை அனைத்தையும் தாண்டிய கொடுமையாகும்.

இந்தியாவின் தெற்குப் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடியவர்கள் ஈழத் தமிழர்களே ஒழிய, சீனாவுக்குத் தனது கடற்பரப்பைத் தாரை வார்த்துக் கொடுக்கும் சிங்களவர்கள் அல்ல என்பதை இந்திய அரசாங்கம் உணர வேண்டும்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவாகக் கருதப்படும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சுதந்திரத்தில் இந்தியா இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும்.

ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வு, தடுப்பு முகாம்களில் அடைபட்டு அவதியுறும் மக்களின் விடுதலையும் மறுவாழ்வும் குறித்து இந்திய அரசும் தமிழக அரசும் கவலைப்பட வேண்டும்.

... இப்படி நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கின்றன!"

"தமிழக மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"

"தமிழகம் என்று சொல்லும்போது, ஒரு காதில் இன்பத் தேனும், மறு காதில் பெருமூச்சும் விழு கிறது. ஈழத் தமிழரின் விடுதலைக்கு மட்டுமின்றி, அனைத்துலகத் தமிழரின் மேம்பாட்டுக்கும் தமிழகமே உந்து விசையாக விளங்க வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழகம்கொண்ட அக்கறையும் கரிசனமும் நாம் நன்கு அறிந்தவை. நாங்கள் மக்களாட்சி நெறிப்படி, வன்முறை இன்றி, அரசியல் செயற்பாட்டின் ஊடாக இந்திய அரசுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையே ஒரு நல்லிணக்கப் பாலத்தை அமைக்க தமிழகம் உதவ வேண்டும். நாம் விரும் பியோ விரும்பாமலோ இந்திய அரசின் உதவியும் ஒத்தாசையும் இன்றி ஈழத்தில் நிரந்தர அமைதிபற்றி உரையாட முடியாது


!நன்றி- விகடன்

கலரைச் சொல்லு... கேரக்டரைச் சொல்றோம்

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்' - இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். 'உங்களுக்குப் பிடித்த கலரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல்லுகிறோம்' என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்...

வெள்ளை : நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!

சிவப்பு : ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தைகூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!

பிங்க் : சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காகப் பசித்த பூனைபோலப் பரிதாப முகம் காட்டி நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).

மெரூன் : மெரூன் என்றால்மெச்சூ ரிட்டி என்று அர்த்தம். வாழ்க்கை யில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். ஸோ... மெரூன் பார்ட்டிகளுக்கு உடனடியாக ஃபேஸ்புக்கில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங் கள்!

ஆரஞ்சு : சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்!

மஞ்சள்: புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால், உங்களுக்கு மஞ்சள் பிடிக்கும். ஒசாமாகூட இருந்தாலும் உங்களுக்குச் சிரிப்பு வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங்களுக்கு முதல் தேவை முழுச் சுதந்திரம்!

பச்சை : மென்மை பிளஸ் நேர்மைதான் பச்சை பார்ட்டிகள். உங்களைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங்கள் ஆயுதம். அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்புகள் உங்களுக்கு ரெகுலராக ஆப்புகள் வைப்பார்கள். பி அலர்ட்!

கறுப்பு : கிவ் ரெஸ்பெக்ட்... ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்துவிடும்!

லேவண்டர்: கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ளல். ஆனால், வேலை வந்துவிட்டால், குறட்டைவிடு வீர்கள்.



வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே... மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

மூலம் : ஆனந்த விகடன்
nandri- கார்த்திகா

பாலிசி...

பாலிசி...



என்னை சார்ந்து இருப்பவர்களுக்கான, என் குடும்பத்திற்கான பாதுகாப்பாக ஒரு ஆயுள் காப்பீடும் எடுத்துவிடலாம் கூடவே மருத்துவ காப்பீடும் என்று நான் முடிவு செய்து, பல விதமான அலசல்களுக்கு பிறகு ஒரு நாள் காசோலைகளுடன் நான் கிளம்பி போய் சேர்ந்தது அண்ணாநகரில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனத்தின் கிளை ஒன்றில், கிளையின் துணை மேலாளரை சந்தித்தேன்

”யெஸ் சார், ஐ ஆம்”.. என்று அவர் பெயர் சொல்லி பலவிதமான திட்டங்கள், பயன்கள் என்று ஆரம்பித்ததும்.. நான் சொன்னேன் சார் எனக்கு இப்பொதைக்கு 15 லட்ச ரூபாய்க்கு எடுக்கவேண்டும் அதுவும் டேர்ம் பாலிசி போதும், அதற்கான வழிமுறைகள் சொன்னால், காசோலை தந்துவிட்டு வேலை முடிக்கலாம். புதை பொருள் அராய்ச்சி நான் முடித்து வந்திருப்பது அவருக்கு புரிந்தது, உடனே தேவையான படிவங்கள் எடுத்து வந்து கையெழுத்து வாங்கும்போது, நான் கேட்டேன்..
“அவ்வளவுதானா?, எப்போது முதல் எனக்கு காப்பீடு உறுதி செய்யப்படும்?”
“ சார் பேப்பர்ஸ் மும்பைக்கு போகவேண்டும், மேக்சிமம் 10 நாட்கள்,”

சரி என்று காசோலை தந்து வேறு வேலை பார்க்க கிளம்பினேன். மூன்றாவது நாள் சரியாக தொகை என் கணக்கிலிருந்து எடுக்கப்படிருந்தது, நான் பாலிசி டாக்குமெண்ட்டுக்காக காத்திருந்தேன். ஒரு மாதம் கழித்தும் எந்த பதிலும் வராமல் நான் திரும்ப அண்ணா நகர் அலுவலகத்தில் துணை பார்டியை தேட அவர் சிங்கப்பூர் டூர் போயிருப்பதும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்ற பதில் கிடைத்தது. என் விவரங்களை சொல்லி என் பாலிசிக்கான தற்போதைய நிலை குறித்து கேட்க

”சாரி சார், அவர் ட்ராவ பூட்டிட்டு போய்ட்டாரு, வேற எங்கயும் உங்க டாக்குமென்ட் இல்ல, அவர் வந்தாதான் தெரியும்”
”என்ன சார் இது நான் என்ன பைக், இல்ல க்ரெடிட் கார்டா அப்ளை பண்ணியிருக்கேன், ஒரு லைஃப் பாலிசி அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி, காசு கூட அப்பவே என் கணக்குலேர்ந்து எடுத்தாச்சு, இன்னும் டாக்குமெண்ட் வரல, என் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் யாருக்கும் தெரியல, இத்தனைக்கும் நான் பார்த்தது அஸிஸ்டெண்ட் மேனேஜர். இதுதான் உங்க சர்வீசா? ஒரு வாரத்துல எனக்கு பதில் சொல்லுங்க, முடியலையா, பணத்த திருப்பி குடுங்க, வேற கம்பெனில பாலிசி வாங்கிக்கிறேன்.” ம்ஹூம் ஒரு தகவலும் இல்லை பத்தாவது நாள் நான் அந்த அஸிஸ்டெண்ட் மேனேஜருக்கு போன் செய்தேன். ஒன்றுமே தெரியாதது போல பேசிய அவர், 3 நாட்களில் எல்லாம் முடிந்துவிடும் என்றார். 4 ம் நாள் நான் அவர்களுடைய தலைமை அலுவலகத்துக்கு மெயில் அனுப்பினேன், எனக்கு அவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்ய இயலாது என்பது தெரிவிக்கப்பட்டது, நாக்கை பிடுங்கி நாண்டுகிட்டு சாவது போல சில கேள்விகள் கேட்டதும், சென்னை கிரீம்ஸ் ரோடிலுள்ள அவர்களுடைய அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தனர், கவனக்குறைவு, வாடிக்கையாளரிடம் சரியான தகவல் சொல்லாதது, ஒரு மாதத்திற்கும் மேலாக என் பணத்தை முடக்கி வைத்தது போன்றவறிற்க்காக வருத்தப்பட்ட ஒரு உயர் அதிகாரி, ஒரு வாரத்தில் காசோலை திரும்ப வரும் என்று உறுதி அளித்தார், காசோலையும் வந்தது கூடவே ஆதங்கமும், வன்மமும்.

நிறைய தகவல்கள் தேடினேன், புத்தகங்கள், இணையம் இன்ன பிற, சரியான தகவல் பெற இயலாது முடிவெடுத்தேன் எல் ஐ சி யில் 10 நாட்கள் வகுப்புக்கு போய், தேர்வெழுதி முகவரானேன். எப்போதும் எல்லாவிடத்திலும் கேட்கப்படும் பட்டும் படாமல் குத்திக்காட்டப்படும், அதே கேள்வி முழு நேர தொழிலாய் செய்பவர்கள் மூலம் என்னிடமும் கேட்கப்பட்டது..

”ஏன் சார் நீங்கதான் ஒரு தொழில் பண்றீங்க, காசு வருது, எங்களுக்கு இதுதான் எல்லாமே, நீங்களும் போட்டிக்கு வந்தா நாங்க என்ன பண்றது? முழு நேரமும் எடுத்து பண்றவங்கதான் இதுக்கு லாயக்கு தெரியுமா, இது ஹாபி கிடையாது..”
நான் பொறுமையாக பதில் சொன்னேன்.. இத்தனை வருடத்தில் யாரும் என்னை வந்து பாலிசி எடுப்பதின் மகத்துவம், அத்தியாவசியம் எதுவும் சொல்லவில்லை ஒரு முகவர் கூட என்னை சந்தித்ததில்லை, இது ஒரு வகையில் சமூக சேவைதான் எனக்கு. அதுவும் எனக்காக நான் இதை பற்றி அறிந்துகொள்ள இங்கே வந்து, இதன் முக்கியத்துவம் புரிந்ததால் முகவரானேன். மற்றபடி என் தொழிலில் நான் சம்பாதிப்பதே எனக்கு போதுமானது.

என்னுடைய வளர்ச்சி அதிகாரி ஒரு அற்புதமான மனிதர், நிறைய கற்றுக்கொள்ள வகுப்புகள் ஏற்பாடு செய்வார், பெரிய பெரிய கார்பொரேட் மனிதர்கள் மார்க்கெட்டிங், காப்பீடின் அவசியம், அதற்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் இன்ன பிறவற்றை பற்றி வகுப்புகள் எடுப்பார்கள். அப்படியான வகுப்புகளில் நான் கற்றது நிறைய. போன வாரத்தில் ஒரு வகுப்பில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் உங்களுடன் பகிர விருப்பம்::

'ATTEND THE LAST NEED FIRST'


பயிற்சி முகாமில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட வாசகம் மேலே உள்ளது. ’கடைசி தேவைகளை முதலில் கவனியுங்கள்’ சரியாக மொழி பெயர்த்துள்ளேனா தெரியாது. ஜல்லிக்கட்டு காளை போல நம் தின பொருளாதாரம் வித்தை காட்டுகிறது. மென் பொருள் வல்லுனர். கை நிறைய சம்பளம், கேட்ட பணம் உடனே கிடைக்கும், இனி அவர்களே உலகம் என்று போன வருட உலக பொருளாதார சுனாமிக்கு முன்புவரை நம்பி கல்லா கட்டிக்கொண்டிருந்த துறைகள் நிறைய. 25 லட்சத்திற்கு ஃப்ளாட்டா அற்பமாய் பார்த்த காலங்களில் முதல் மரியாதை 50 லகரத்ததிற்கு மேல் கடனில் வீடு வாங்க வந்த மனிதர்களுக்கு மட்டுமே. எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்த காலம் அது. ஒரு சிறிய வட்டம் அது, ஆனால் எல்லா கவனிப்பும் அவர்களுக்கானதாய் இருந்தது. குப்பை மேடெல்லாம் கோபுரங்களாக்கி, வைர வைடூரியமாய் ஜொலிக்க வைத்து வியாபாரிகள் சந்தையில் அவர்களுக்கான கடை விரித்திருந்தார்கள். சாதாரணமாக கலர்ப்ளஸில் பாதி கழிவில் சிறப்பு விற்பனையில் நான் பார்த்த ஒரு சாதாரண சட்டை விலை ரூ.4500/- எனக்கு சிரிப்புதான் வந்தது. பாம்பின் கால் பாம்பறியும் நானும் தொழில் செய்பவன் தான். ஆனாலும் விலைகளின் போக்கு எனக்கு பயத்தை தந்தது. நடுத்தர குடும்பங்கள் சென்னையில் வீடு வாங்கும் நினைப்பை குழி தோண்டி புதைத்து விடுங்கள், இந்த இடம் உங்களுக்கானதல்ல, சப்தமாய் சொல்லப்பட்டது. இத்துனை நாள் இந்த வியாபாரிகளை வாழ வைத்த நடுத்தர மக்கள் அம்போ என்று விடப்பட்டு, பேராசைக்கான திட்டங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உயரே போகும் எதுவும் கீழே வந்துதானே ஆகவேண்டும், அமெரிக்காவில் ஆட்டம் கண்டதும் விஷயம் தெரிந்து ஆடாமல் வாழ்க்கை நடத்திய மனிதர்கள் கலங்கவில்லை, மற்றவர்கள் கதை, சொல்லி மாளாது, ஒரு தொலைக்காட்சியில் ஒரு நபர் ஒரே நாளில் தான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டது சொல்லி அழுது கொண்டிருந்தார் அப்போது சொல்லப்பட்ட ஒரு அறிவுறை மனதில் நின்றது.

“வேலை போய்விட்டது க்ரெடிட் கார்ட் முதல் மற்ற எல்லா கடனையும் எப்படி அடைப்பேன் என்று இப்போது அழும் நீங்கள் அளவுக்கும் தகுதிக்கும் மீறி வருங்கால சம்பாதியத்தை இப்படி செலவு செய்திருக்கிறீர்களே, எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்? பதில் சொல்ல எதுவும் இல்லை அவரிடம்.

குறைந்தது 2 வருடங்கள் வேலை இல்லாவிட்டாலும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சேமிப்பு வைத்திருப்பவரால் மட்டுமே எந்த சூழ் நிலையையும் தாக்கு பிடிக்க முடியும். ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும் தேவையான அளவுக்கு குடும்பத்தில் எல்லோருக்கும் எடுத்திருக்க வேண்டும். நல்ல வேலையில் இருந்தாலும் உங்களின் கடைசி காலத்திற்காக இப்போதே நீங்கள் தயாராக வேண்டும்.

ஆம் சம்பாதிக்கும்போதே ஓய்வு காலத்திற்காய் முன்னேற்பாடுகள் செய்வது, குறைந்த பட்சம் குடும்பத்தில் மரியாதையாவது நமக்கு கிடைக்க வழி செய்யும். (மரு)மகனிடமோ, (மரு)மகளிடமோ ஒரு வாய் காபிக்காக கை ஏந்த வேண்டிய நிலை வராது, எவரும் எப்படியும் மாறலாம், நம்மை சார்ந்திருப்பவர்களை காப்பதோடு நம் கடைமை முடிவடைவதில்லை, நம்மையும் காத்துக்கொள்ள ஒரு திட்டமிடல் அவசியம் வேண்டும். ஆமாம் ’பெண்னும் - சன்னும்’ கொடுகாததை ’பென்சன்’ நமக்கு தரும். வேண்டியது அதற்கான திட்டமிடல் மட்டுமே.

கடைசி காலத்திற்கான சேமிப்பு அறிவியல் சார்ந்தும் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படலாம், கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கை முறை மேம்படும் 'LIVING LONG IS ALSO A RISK'. ஓரு காப்பீட்டு முகவர் தன் வாடிக்கையாளரிடம் சொல்ல முடியாதது இதுதான். ஒரு குடும்பத்தலைவரின் திடீர் இழப்புக்கு பிறகு அந்த குடும்பத்தின் கதி??

நம் யாராலாவது ஒரு லிஸ்ட் தயார் பண்ண முடியுமா? நம்மின் இறப்புக்கு பிறகு நம் குடும்பத்தை இன்னார் இன்னார் காப்பாற்றுவார், நம் குழந்தைகளுக்கான செலவுகள் இவரால் செய்யப்படும், இவர் என்னுடைய கடன்களை அடைத்துவிடுவார். அந்திம காலத்திற்கான செலவுகள் வரை பட்டியலிட முடியுமா? சுய பரிசோதனைகள் செய்தால் உண்மை சுடும். அவர் அவர் இருப்பு அவரவர்க்கு முக்கியம். இப்போது நாம் வாழ்வதும் அதுபோலத்தான். இல்லாவிடின் அனாதை ஆஸ்ரமங்களும், குழந்தை இல்லாதவர்களுக்கான சிகிச்சைகளும் தொடர்கதையாக இருக்குமா? போகட்டும் இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ செலவுகள்? கல்வி செலவுகள்? தின வாழ்க்கைக்கான செலவுகள்? சரி இப்போதுக்கான மருத்துவ செலவுகள் திடீரென எதிர்பாராமல் ஏதாவது சுகமில்லை என்றால் எங்கு போய் நிற்பது? அல்லது எதிர்காலத்திற்கான சேமிப்பை உடைப்பதா? சிகிச்சைக்கு பிறகு? சிகிச்சை காலத்தில் வேலை போனால்? முடிவில்லாத கேள்விகள் தவறான நம் வாழ்க்கை கணத்தின் பரிட்சைக்காக தயாராய் இருக்கிறது.

ஐயா உங்களுக்கு இவ்வளவு ரூபாய் சம்பளம். இத்தனை வருடம் வேலை மிச்சமிருக்கிறது, உங்களுக்கான கடன் இவ்வளவு, உங்கள் குழந்தைகள் எதிர்காலத்திற்க்காக இவ்வளவு பணம் தேவைப்படும், ஏதேனும் மருத்துவ செலவுகள் வந்தால் அதற்கும் பணம் தேவை. இவ்வளவும் நீங்கள் திடீரென்று இறந்துவிட்டால் யார் பொறுப்பேர்ப்பார்கள்? அப்படி ஒரு இழப்பு ஏற்படின் யார் தயவும் இல்லாது உங்கள் குடும்பம் கரை சேர நீங்கள் குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு உங்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு முகவரின் கேள்வி வாடிக்கையாளரை பார்த்து இதுதான். அப்படியே சொன்னால் பருப்பு வேகாது. உண்மை யாருக்கும் பிடிக்காது. அலட்சியமும், தவறான புரிதல்களும், இவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தை ஒரு சாதாரணமான டார்கெட் விஷயமாக, வரி சேமிப்பிற்கான குறுக்கு வழியாக, மிக மிக முக்கியமாய் அற்ப செலவாக பார்கப்படுவது வேதனை.

ஒவ்வொரு பாலிசிகளும் வருங்கால தனிமனித நிகழ்வுகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில் வகுக்கப்பட்டதுதான். முக்கியமாய் 11 லட்சம் கோடி சொத்து வைத்துள்ள LIC அரசாங்கத்திற்கு பதில் சொல்ல கடமை பட்ட ஒரு நிறுவனம். 98 சதவிகிதத்திற்கும் மேல் இழப்புகளுக்கான தொகைகள் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 50 ஆண்டுகால வரலாறு அதற்கு இருக்கிறது. அலுவலகங்கள் சாதா தோசையாக இருக்கலாம், அனால் உள் செயல்பாடுகள் உலக தரதிற்கு சவால் விடுபவை. வாடிக்கையாளரின் தவறான தகவல்கள், முகவரின் தவறுகள் போன்றவை சரி செய்துகொள்ளக்கூடியதுதான். சாதா தோசை ஆபீஸ்கள் மூலம் இந்த முறை இவ்வளவு பொருளாதார சுனாமியிலும் பல கோடி ரூபாய் லாபமீட்டியிருக்கிறது. ஸ்பெஷல் சாதா தோசை கம்பெனிகள் பல கோடிகள் மைனஸ் ஓட்டு வாங்கி செலவுகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது. இந்திய பங்கு சந்தையில் அதிக முதலீடுகள் LIC மூலமே செய்யப்படுகிறது. தட தடவென்று சென்செக்ஸ் விழுகிறதா கை கொடுத்து காப்பாற்றுவது LIC தான். தேன் தடவி மார்கெட் செய்ய முடியாது, ப்ரபலங்களை வைத்து சீன் காட்ட முடியாது, மக்கள் பணம் சூறையாடமுடியாது பல கட்டுப்பாடுகள். ஆழ்ந்து செல்ல செல்ல காப்பீடு திட்ட வரை முறைகள் நிறைய மூளை உள்ள மனிதர்களால் எல்லா காரண காரியங்களுடன் வகுக்கப்படுகிறது. ரிசப்ஷனில் போனில் பேசியோ, குரல் மட்டும் கேட்கும் குரளி வித்தைகள் இங்கே இல்லை, நேரே சென்று கிளையின் மேலாளரிடம் கேள்வி கேட்க்கலாம்,

மீண்டும் உணர்ச்சிகளுக்கு வேலை வைக்காமல் மேலே உள்ள 'ATTEND THE LAST NEED FIRST' திரும்ப படியுங்கள். வரும் காலம் வேறானது. இதுவரை அலட்சியம் காட்டியிருந்தால் உடனே ஆவன செய்யுங்கள், வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பற்கள் பாதுகாப்பு, தேவையான அளவு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு, போன்றவை செலவுகளல்ல சேமிப்பு.

"வர காசு இந்த மாசத்துக்கே பத்தல இதுல பென்சன பத்தி பேச வந்துட்டான்" என்று யாராகிலும் கேட்டால்..

"வேலை செஞ்சு காசு சம்பாதிக்கிற, இப்பயே முடியலயே .. தம்பிடிக்கு வழியில்லாத அப்ப என்ன பண்ணுவீங்க???"

பதிலும் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள்....

01.Hunt for a Job. 02. Depend on Children. 03. Live in Deprivation.

நம் வாழ்க்கை, நம் கையில்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

முருகன் இட்லிக் கடை

சாப்பாட்டுக்கடை
இட்லி என்றவுடன் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது.. மதுரை ப்ளாட்பார இட்லிகடைகளும், ரத்னா பவன் இட்லி சாம்பாரும், முருகன் இட்லிக் கடையும்தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி வெயிட் செய்து சாப்பிடுகிற ஒரு உணவகமாகிவிட்டது முருகன் இட்லிக் கடை. சென்னை முழுவதும் பல இடங்களில் அவர்களது ப்ராஞ்சுகள் திறக்கப்பட்டாகிவிட்டது என்றாலும், ஒரு இட்லிக்கு 8 ரூபாய் வாங்கினாலும் கூட்டம் குறைந்த பாடில்லை.

இப்போது நார்த் உஸ்மான் சாலையில் உள்ள அவர்களது ப்ராஞ்சில் மாலையில் மட்டும் ப்ஃபே சிஸ்டத்தில் உபசரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கு 112 ரூபாயும், சிறுவர்களுக்கு 56 வாங்குகிறார்கள்..
.
இட்லி, பொங்கல், சக்கரை பொங்கல், மெதுவடை, தோசை, மசால் தோசை, பட்டர் தோசை, நெய் தோசை, பொடி தோசை, மற்றும் எல்லா வகையான ஊத்தப்பம், ரவா தோசை, சாம்பார், நான்கு வகை சட்னி, ம்ற்றும் பொடியுடன் என்று எல்லா டிபன் அயிட்டங்களும் அன்லிமிட்டாக த்ருகிறார்கள். எவ்வளவுதான் மோசமாக சாப்பிடுபவராக இருந்தாலும் இங்கு சாப்பிடுவது லாபம் தான்.
ஏனென்றால் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை சாப்பிட்டால் குறைந்த பட்சம் நூறு ரூபாய் ஆகிவிடும் இவர்களது உணவகத்தில், இதில் பொடிக்கு தனியே மூன்று ரூபாயோ, ஐந்து ரூபாயோ..அப்படியிருக்க, வகை தொகை இல்லாமல் சுமார் இருபத்திரண்டு அயிட்டங்கள் 112 ரூபாய்க்கு என்றால் தரை ரேட்.. காபி, பால், அல்லது ஜிகர்தண்டாவோடு. விரைவில் விலையேற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது. இட்லி மட்டும் ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. ஒரு நடை போயிட்டு வந்திருங்க.. அருமையான டின்னரை கொண்டாடுங்க.. மாலை 7-10.30 மணி வரை.. பேஸ்மெண்டில்.

நன்றி-http://cablesankar.blogspot.com

எது தீட்டு?

மத்தேயு
15 அதிகாரம்

***********************************************************************************


11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

20. இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
****************************************************************************
மாற்கு
7 அதிகாரம்



15. மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

16. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.

17. அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

18. அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

19. அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.

20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத்
தீட்டுப்படுத்தும் என்றார்

நன்றி-rathnapeters.blogspot.com

வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே!

மொபைல் போனுன்னு ஒண்ணு வந்தாலும் வந்துது... எவன் கைல பாத்தாலும் போனு. அதுலயும் கால்ஸ விட வர வர இந்த எஸ்.எம்.எஸ்ஸூங்கிற இம்சை ரொம்ப ரொம்ப அதிகமாகிப் போச்சு. எதுக்கும் போன் பண்ணிப்பேசற வேலையே இல்ல. எல்லாமே மெஸேஜ் தான். விடியற்காலைல ஆரம்பிச்சு நைட்டு தூங்குற வரைக்கும் (அதையும் தாண்டி நடுராத்திரி வரைக்கும்) சளைக்காம மெஸேஜ் அனுப்பித்தள்ளிகிட்டு இருக்கானுங்க.

அதுவும் நார்மல் மெஸேஜ விட ஃபார்வேர்டு மெஸேஜூதான் அதிகம். எது வந்தாலும் ஃபார்வேர்ட் பண்றதுன்னு ஒரு கொள்கைப்பிடிப்போட செயல்படுறாங்க. இதுல வயசு வித்தியாசம் கிடையாது. பத்து வயசுப்பய புள்ளைல இருந்து அறுபது வயசு ரிட்டையர்டு ஜென்டில்மேன் வரைக்கும் பாசக்கார பயகளா தான் இருக்காங்க. மெஸேஜக்குன்னு கார்டு வாங்கிப்போட்டுட வேண்டியது.

ஆனா அந்தக் கருமத்தையாவது ஒழுங்கா செய்யுறாங்களான்னா, அதான் கிடையாது. நைட்ல அனுப்ப வேண்டியத காலைல அனுப்பறது, காலைல அனுப்பறத மத்யானம் அனுப்பறது. பசங்களுக்கு அனுப்ப வேண்டியத பொண்ணுங்களுக்கு அனுப்பறது. பொண்ணுங்களுக்கு அனுப்ப வேண்டியத பாட்டிங்களுக்கு அனுப்பறது. ஏன்யா இப்படி பண்றீங்க.. குழப்பத் திலகங்களா? அனுப்புற மெஸேஜூக்கும் ரிஸீவ் பண்ற ஆளுக்கும் சம்பந்தமே இருக்கறதில்ல.

இப்போ வர்ற மொபைல்லல்லாம் பல்க் மெஸேஜ் (send to all) வசதி வேறயா. ஒரு 50, 100 பேர செலக்ட் பண்ணி பல்க்கா அடிச்சு விட்டுற வேண்டியது. அதுங்க தபதபன்னு வந்து நம்ம மொபைல்ல எறங்கிடுது.

தீபாவளி, பொங்கல், பக்ரீத்து, மொகரம், கிறிஸ்துமஸ்ஸூ, குட் ஃப்ரைடே, வேலன்டைன்ஸ் டே, மதர்ஸ் டே, உமன்ஸ் டே, நியூ இயர், ஸ்டிரைக்கு, எலக்ஷ்னு எதையும் உட்றதில்லை. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடணும்னு பாரபட்சம் பாக்காம
மெஸேஜா அனுப்பறது. கிரிக்கெட் ஸ்கோரு, அப்டேட் நியூஸூ, டுடே ஸ்பெஷல்னு எதையெல்லாமோ அனுப்பறது... என்னமோ ஃப்ரீ நியூஸ் ஏஜன்ஸி நடத்துறதா நெனப்பு.

இப்பிடித்தான் ஒரு ரெண்டு வாரம் முன்னாடி மதர்ஸ் டே அன்னிக்கும். காலைல இருந்து ஒரே மெஸேஜா வந்துகிட்டிருக்கு. அம்மாவ பாத்துக்கோ, அம்மாக்கு மரியாத குடு, அம்மாதான் தெய்வம், அம்மாதான் எல்லாம், அன்புன்னா அம்மா, மத்ததெல்லாம் சும்மான்னு ஒரே டார்ச்சர். ஆளாளுக்கு அட்வைஸ் மெஸேஜ். நாம ஒரு வேளை நம்ம அம்மாவ ரொம்ப கொடும கிடுமப்படுத்துறோமோன்னு யோசிக்க வச்சுட்டாய்ங்க. இல்ல எலக்ஷ்ன் டைமாச்சே, நம்மள ஏதும் நமக்கே தெரியாம ஏ.டி.எம்.கே-ல அட்மிஷன் போட்டு விட்டுட்டாங்களோன்னு வேற எனக்கு ஒரு டவுட்டு.

(ஒரு நிமிஷம் சீரியஸா பேசுவோமா? மேட்டர் என்னன்னா, எங்க அம்மா இறந்து போய் ஒன்றரை வருஷமாச்சு. இந்த நெலமைல எனக்கு இப்படி 20க்கும் மேல மெஸேஜ் மேல மெஸேஜா வந்தா எவ்வளோ கடுப்பாகும். கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க? - எல்லாமே நம்ம மேல உள்ள பாசத்தாலதான் அனுப்புறாய்ங்க. ஓ.கே... ஆனா என்னோட நிலைமை?)

இதுல ஏற்கனவே போன் கம்பெனிக்காரன், விளம்பரக் கம்பெனிக்காரன், லோன் குடுக்குறவன், (குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன்லாம் தொழிலதிபராம்பா)-னு எவன் எவனோ நம்ம நம்பர கண்டு பிடிச்சி மெஸேஜ் அனுப்புறானுங்க. இப்ப
எலக்ஷ்னுக்கு கூட கேன்வாஸ் பண்ணினாங்கப்பா.. அமெரிக்கா எலக்ஷ்னப்ப ஒபாமா கூட அப்டிப் பண்ணாராமே? (ட்விட்டர்...?)

நாம போன் பில்லக் கொஞ்சம் கம்மி பண்ணலாமேன்னு நம்ம நெருங்கின சர்க்கிள்ல மெஸேஜ் மூலமா கம்யூனிகேட் பண்ணிட்டு இருப்போம்... அதுவும் எங்க ஆபீஸூல ஒரு நல்ல பழக்கம், டாப் லெவல் ஆளுங்களுக்கெல்லாம் ஏதாவது மெஸேஜ் அனுப்புனா கர்ம சிரத்தையா உடனே ரிப்ளை பண்ணுவாங்க. அப்போ நாமளும் அந்த மாதிரி இருக்கணுமா? வேணாமா?

டெக்னாலஜி வேற அட்வான்ஸ்டா இருக்கா? நம்ம மொபைல்ல போன் பேங்கிங், ECS மெஸேஜ், கிரெடிட் கார்டு ரிமைண்டர், பர்த்டே ரிமைண்டர், மியூச்சுவல் பண்டு, ஆன்லைன் பில்லிங் வசதில்லாம் போட்டு வச்சிருப்போம்... அப்பிடி ஏதும் போட்டு
இருந்தது... போச்சு.

இந்த வெட்டி ஆபீஸர்ஸ் அனுப்புற குப்பையில அதுங்க கதி அதோ கதிதான். நமக்கு வரவேண்டிய முக்கியமான மெசேஜ் வந்து தொலையாது. இன்பாக்ஸ் ஃபுல், இன்பாக்ஸ் ஃபுல்லுன்னு மட்டும் காமிச்சுட்டு இருக்கும். அப்புறம் உக்காந்து ஒவ்வொண்ணா
டெலிட் பண்ணிட்டு இருக்கணும். நெட்வொர்க் பிஸியில அந்த முக்கியமான மெஸேஜூ ஊரையெல்லாம் சுத்திட்டு மூணு நாள் கழிச்சு தான் நம்ம கிட்ட வந்து சேரும், அதுக்குள்ள டைம் லிமிட் கிராஸாகியிருக்கும்.

இந்த தொந்தரவெல்லாம் வேணாம்னு மெஸேஜ் ஃபெஸிலிட்டிய ப்ளாக் பண்ணி வச்சா வர வேண்டிய முக்கியமான மெஸேஜூம் வந்து தொலையாது. டோட்டலா ப்ளாக் ஆயிடும். அதுக்கு பயந்துகிட்டே அமைதியா இருக்க வேண்டியிருக்கு. அதுவும் இந்த புதுசா மொபைல் வாங்குற பயபுள்ளைக இருக்கானுங்களே. ஆறு மாசத்துக்கு அடங்க மாட்டானுங்க.
ஆர்ட்டின் போட்டு அதுல அம்ப உட்டுத்தான் குட்மார்னிங் சொல்லுவானுங்க. முடியலப்பா, முடியல..

ஆகவே வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே! யாருக்காவது மெஸேஜ் அனுப்புறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு கொஞ்சம் யோசிங்க. இது தேவையா? அவசியம் இவனுக்கு குட்மார்னிங் சொல்லித்தான் தொலையணுமா? நாம சொல்லலைன்னா இவன் எந்திரிச்சு வேலையப்பாக்க மாட்டானா? இல்ல அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ரெண்டு ஃபார்வேர்ட் பண்ணாப் போதாதா? இல்ல நமக்கு வேற ஏதாவது வேலை இருக்கான்னாவது யோசிங்க

இதையும் மீறி மறுபடி மறுபடி தொந்திரவு பண்ணிட்டே இருந்தீங்க... பீ கேர்ஃபு்ல்.. அப்புறம் நானும் மெஸேஜ் கார்டு வாங்கிப்போட வேண்டியிருக்கும்... ஜாக்கிரதை..!

நன்றி- எஸ்கா

கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! - ஒரு கொந்தளிப்பு் கடிதம்

"மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது. அவரை ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் நியமனம் செய்தார்..." என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆச்சரியப்பட்டேன். அதேநேரத்தில் பயங்கர அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன்!

அப்படி என்ன செய்துவிட்டார் மோகன்லால்..!?

மேகன்லால் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர். பலவிதமான கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர். ராணுவ அதிகாரியாக சில படங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். இதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அவரது படங்கள் பல நானும் ரசித்து பார்த்திருக்கிறேன்.

ஆனால், இரண்டே இரண்டு திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்ததை மட்டும் வைத்து ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டிருந்தால், அதை என்னைப் போன்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

வெறும் இரண்டே படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்து விட்டு, அவற்றில் ஒரு சில பிஸ்கோத்து தீவிரவாதிகளை மட்டும் டம்மி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மோகன்லாலுக்கு கொடுக்கும்போது, என்னால் விம்மி அழாமல் இருக்க முடியவில்லை!

காரணம்...??!!???

சினிமா உலகில் கால் வைத்ததிலிருந்தே, ஏறத்தாழ அனைத்துப் படங்களிலும் ராணுவ அதிகாரியாக / போலீஸ் அதிகாரியாக நேர்மையாக நடித்தவரும், கன்னியாகுமரியிலிருந்து, காஸ்மீரு வரை அத்தனை தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றும், உயிருடன் பிடித்தவருமான நமது புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்தை, இந்திய ராணுவம் கெளரவிக்காதது ஏன்?

விஜயகாந்த் இடத்தை மோகன்லாலால் ஏணி வைத்தாலும் நெருங்க முடியாது என்பது மழலைகளுக்கும் தெரிந்த ஒன்று!

வெள்ளித்திரையில் காக்கிச் சட்டையும், மிலிட்டிரி ட்ரெஸ்சும் மாட்டிக் கொண்டு விஜயகாந்த் செய்த சாதனைகள் தான் எத்தனையெத்தனை?????

இந்த நேரத்திலே ஒரு சில சாதனைகளை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். இது, இந்திய ராணுவத்தை மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத்துக்கும் விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொள்ளலாம்!

1) கடந்த 30 வருஷத்துக்கும் மேலாக நமது பொதுச் சொத்தான சந்தன மரங்களைக் கடத்தியும், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை எடுத்தும் கடத்தல் செய்து வந்தவன் சந்தனக்கடத்தல் காரன் வீரப்பத்திரன். அவனைப் பிடிக்க பல போலீஸ் அதிகாரிகள் போனபோது இரக்கமற்று அவர்களை சுட்டுக்கொன்று காட்டுராஜாவாக வாழ்ந்து வந்த கடத்தல் மன்னன் வீரபத்ரனை "கேப்டன் பிரபாகரனாக" தனியாக நின்று சண்டைபோட்டு உயிருடன் பிடித்து வந்தவர் யார்? மோகன்லாலா...? இல்லை நமது கேப்டன்!!!

2) இளம்பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவர்களது உடல் உறுப்புக்களை எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தல் செய்து வந்த கொள்ளைக் கூட்டத்தை மொத்தமாக "புலன் விசாரனை" செய்து தனியாக நின்று பந்தாடி கூண்டோடு அழித்து பல அவார்டுகளை குவித்தவரின் பெயர் என்ன மோகன்லாலா...? இல்லை நமது கேப்டன்!!!

3) பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்து, நமது நாட்டை சீரழிக்க நினைத்து, இறுதியில் பள்ளிச் சிறுவர்களைக் கடத்தி வைத்து தப்பிக்க நினைத்தார்கள் பயங்கரவாதிகள்... இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி பிரதமரே முடிவெடுக்க முடியாமல் இருக்கும் போது, அரசாங்கத்து தெரியாமலே தீவிரவாதிகளின் இருப்பிடத்துக்குள்ளேயே சிங்கம் போல சென்று தீவிராவாதிகளை ஒழித்து, அதன் தலைவன் வாசீம் கானை இரண்டு காலாலேயே கழுதை போல் உதைத்து, அபார வீரன் "சேதுபதி IPS" என்று பெயரெடுத்தாரா மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!

4) "மாநகரகாவல்" நிலையத்தில் இருந்து "திருமூர்த்தி"யாக வலம் வந்து நமது நாட்டின் இரண்டு பிரதமர்களை இரு வேறு தருணங்களில் குண்டு வைத்து கொல்ல, அயல்நாடுகளின் உத்தரவின் பேரில் செயல்பட்ட கூலிப்படையை கூண்டோடு கைலாயம் அனுப்பினாரே... அந்த மாவீரனா இந்த மோகன்லால். இல்லை நமது கேப்டன்!!!

5) தினமும் ஒருவேளை சோற்றுக்கு நமது மக்கள் அவதிப்படும்போது, மக்களுக்காக அராசங்கத்தால் வரும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசிகளை மொத்தமாக சுருட்டிய கூட்டத்தை, அவருக்கு தெரியாத அயல் மாநிலங்களில் உள்ள கடத்தல் தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள்ளேயே சென்று தவிடுபொடியாக்கி, நமது 100 கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்த 'தேவனா' இந்த மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!

6) இந்தியாவின் எந்த ஓர் ஆட்சியாலும் அதிகாரத்தாலும் ஒழித்திட முடியாத லஞ்சத்தை, ஒற்றை 'ரமணா'வாக அவதராமெடுத்து மறுஒலிபரப்பு மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம் உண்டா மோகன்லாலுக்கு?... இல்லை நமது கேப்டனிடம் உண்டு.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளின் எண்ணிக்கை மோகன்லாலின் வயதைத் தாண்டினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்தகைய இந்திய தேசத்தின் காவலனான கோடம்பாக்கத்திலே வலம் வந்த கேப்டனை, ராணுவம் கெளரவிக்காமல் புறக்கணித்தது, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பெருங்களங்கம்!

இந்த நேரத்திலே ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்... ஏ அமெரிக்க அரசாங்கமே... விழித்துக் கொள்... எங்கள் கேப்டனின் மகத்துவதை நீயாவது அறிந்து செயல்படு!!!!!

இப்படிக்கு,
கதறலுடன்,
கேப்டன் ரசிகன்.

நன்றி-பிளாக்கன்

பல்புகள் பலவிதம்

பிரியாணி பொட்டலத்தை பிரிச்சு தெருவோரமா போட்டா, காக்கா எல்லாம் கூட்டம் கூடி, கோரஸ் பாடுமே பாத்திருக்கீங்களா..? கிட்டத்தட்ட அதே மாதிரி இருந்தது எங்க காலேஜ் கேம்பஸ். எங்கே பாத்தாலும் கருப்பு கலர் கவுனை போட்டுகிட்டு பசங்களும் பொண்ணுங்களும் என்னவோ சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க. காலேஜ்ல அன்னிக்கு பட்டமளிப்பு விழா.

எல்லாரும் எல்லாரையும் கிண்டல் பண்ணிகிட்டு, எதுக்கு சிரிக்கறோம்னு எந்த ஒரு காரணமும் இல்லாம, எவன் எதைச் சொன்னாலும் சத்தம் போட்டு சிரிச்சுகிட்டிருந்தோம்.

"டைம் என்னடா மச்சி..?"னு ஒருத்தன் கேட்டதுக்கு ஏன் அவ்ளோ நேரம் சிரிச்சோம்னு எங்களுக்கே தெரியலை. வழக்கமா நம்மள கண்டுக்காத பொண்ணுங்க எல்லாம் கூட அன்னிக்கு "ஹாய்..!" சொன்ன சந்தோஷத்துல, பல பசங்க முகம் பீர் போல பொங்கி பூரி போல உப்பியிருந்தது.

வந்தார் வில்லன்; எங்க இங்கிலிஷ் புரொஃபசர். அவருக்கு எங்க சீனியர்ஸ் 'ஷேக்ஸ்பியர்'னு பேர் வெச்சிருந்தாங்க.. நாங்களும் அதை வழிமொழிஞ்சோம்.

'ஷேக்' இருக்காரே.. ரொம்ப சென்சிடிவான ஆளு. உலகத்துல எந்த காலேஜ் ஸ்டூடண்ட்டுக்கும் இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை தான் அவருக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை : டிசிப்ளின்.

இந்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தான் இன்சார்ஜ். ஏற்கனவே கொஞ்சம் சிடுசிடுன்னு தான் இருப்பார்.. இப்ப இந்த பொறுப்பும் சேர்ந்ததுல, பச்சை மிளகா கடிச்ச கடுவன் பூனை மாதிரி ஆயிட்டாரு.. இன்னிக்கு எவன்டா சிக்குவான்னு சிலுப்பிகிட்டுருந்தார்.

என் கெட்ட நேரம், அவர் எங்க பக்கம் வரும்போது நான் தான் சத்தம் போட்டு சிரிச்சிட்டிருந்தேன். என்னோட கருப்பு கவுன் தரைல கிடந்தது.

"ஹலோ.. வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்..?"

தமிழ்ல கேட்டாலே நான் ததிங்கிணதோம்.. இதுல, இங்க்லிஷ்ல வேற கேட்டுட்டாரா.. என் வெளி நாக்கு உள் நாக்கோட போய் ஒட்டிகிட்டு சுத்தமா பேச்சே வரலை.

அதுக்கப்பறம் அவர் பேசினது என் காதுல, " @#$% &*(*.. ? @#$%^%#$%^&*#$$..!" இப்படி தான் விழுந்தது.

வழக்கமா டென்ஷனா இருந்தா, கண்ல தான் பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்க.. எனக்கு காதுல பூச்சி பறந்தது. ஏதோ என் டி ஷர்ட்-அ காட்டி கேட்டதால, "ஸாரி சார்.. அதர் குலோத்ஸ் ஆர் வெட்.. ஸோ திஸ் டி-ஷர்ட்.."ன்னு பினாத்தினேன். அட, இப்ப தான் பாக்கறேன்.. சுத்தி இருக்கற எல்லாரும் என்னவோ இண்டர்வியூவுக்கு போற மாதிரி நல்லா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கானுங்க..

'ஷேக்' கடுப்பாகி தமிழ்ல பேச ஆரம்பிச்சிட்டாரு. "கான்வகேஷனுக்கு வரும்போது எல்லாரும் ஃபார்மல் டிரஸ்ல தான் வரணும்னு மொதல்லயே சொல்லியிருந்தோம் இல்லை.. இந்த மாதிரி ஏன் இன்டீசன்ட்டா வர.. மத்தவங்க எல்லாம் ஒழுங்கா வரும்போது.. ஒய் ஆர் யூ கமிங் லைக் திஸ்.. ஸ்டுப்பிட்..!"

"........."

" என்ன முழிக்கற.. வந்திருக்க சீஃப் கெஸ்ட்டும், சான்சிலரும் என்ன நினைப்பாங்க..? போ.. ஓடு.. இதை கழட்டி எறிஞ்சுட்டு நல்லதா ஷர்ட் போட்டுகிட்டு வா.. இல்லாட்டி இன்னிக்கு நீ சர்டிஃபிகேட் வாங்க முடியாது..! "

என் சந்தோஷம் எல்லாம் வத்திப் போய், உடனே பைக்கை எடுத்துகிட்டு வீட்டுக்கு போய் வேற டிரஸ் போட்டுகிட்டு வந்தேன்.

அப்பறம் மஞ்சா, சிவப்புன்னு கலர் கலரா கவுன் போட்ட குரூப் மேடை மேல உக்காந்துகிட்டு, கருப்பு கவுன் போட்டவங்களுக்கு அறிவுரைகளை வாரி இறைச்சாங்க. நாங்க பட்டதாரி ஆயிட்டோம்.

அடுத்தது போட்டோ செஷன். அதுக்கு பயங்கர கூட்டம். மறுபடியும் பிரியாணி பொட்டல காக்கா கூட்டம் ரிபீட் ஆக, ஷேக் இப்படியும் அப்படியும் அலைஞ்சிட்டிருந்தார்.

நான் ஒரு மரத்தடியில நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல ஒரு பையனை சுத்தி 7,8 பொண்ணுங்க பேசிட்டிருந்தாங்க.. காதுல புகையோட எட்டி பாத்தேன். எந்த டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்னு தெரியலை.. கருப்பா இருந்தான். சிவப்பு கலர்ல ரவுண்ட் நெக் பனியன். அதுல வெள்ளை கலர்ல ஒரு டிசைன். எட்டு பாக்கெட் இருக்க கார்கோ பேண்ட், ஏதோ லோக்கல் பிராண்ட் ஷூ.

அவன் ஏதோ சொல்ல, பொண்ணுங்க லைட்டா சிரிச்சாங்க.. ஷேக் நேர அவன் கிட்ட வந்தார். அவன் போட்டிருந்த டிரஸ்ஸை பாத்தார்.

எனக்கு கிடைச்ச திட்டு எல்லாம் சும்மா.. அவனை இங்க்லீஷ் அடுப்புல போட்டு வாட்டி எடுத்துட்டார். அவன் ஒண்ணும் புரியாம வெலவெலத்து போய், அவரையே கொஞ்ச நேரம் மலங்க மலங்க பாத்துகிட்டு நின்னான்..

அவன் பதில் எதுவும் சொல்லாம இருந்தது 'ஷேக்'குக்கு இன்னும் கடுப்பாயிடுச்சு.. தமிழுக்கு தாவினார்.." என்ன முழிக்கற... பத்து வார்த்தை இங்க்லீஷ்ல சேர்ந்தாப் போல பேசினாலே புரியலை.. நீ எப்படி வேலைக்கு போற இடத்துல பேசப் போற.. உனக்கெல்லாம் எதுக்கு டிகிரி.. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கிடையாது.. டிசிப்ளின் கிடையாது.. பொறுக்கி மாதிரி ஒரு டிரஸ்.. "

அவன் "சார்.. இப்ப உங்களுக்கு என்ன வேணும்..?"

"என்ன வேணுமா.. இடியட்.. இப்படி பிச்சைக்காரன் மாதிரி டிரஸ் போட்டு வந்திருக்கியே.. மொதல்ல வெளிய போ.. இந்த டிரஸ் போட்டுகிட்டு நீ இன்னிக்கு எப்படி டிகிரி வாங்கறேன்னு நான் பாத்துடறேன்.. இன்னிக்கு மட்டுமில்லை.. நீ என்னிக்குமே டிகிரி சர்டிஃபிகேட்டே வாங்க முடியாம பண்றேன் பாரு.."

"எனக்கு எப்படி சார் டிகிரி சர்டிஃபிகேட் குடுப்பாங்க.. நான் பத்தாங்கிளாஸ் ஃபெயில்.. இந்த ஃபங்ஷனை போட்டோ எடுக்க வந்திருக்க போட்டோகிராபர்..!"னான்.

இப்ப எங்க வீட்ல டிகிரி வாங்கி முடிச்ச பிறகு நாங்க எடுத்துகிட்ட குரூப் போட்டோ இருக்கு. அதுல எல்லாரும் கேமராவை பாத்து நல்லா சிரிச்சிட்டிருக்கோம். 'ஷேக்' மட்டும் கேமராவ பாக்காம முகத்தை திருப்பி வெச்சிருக்காரே.. ஏன்ன்ன்ன்..?
நன்றி- பல்பானந்தா

புதன், 15 செப்டம்பர், 2010

பாலியல் தொழிலாளர்கள்

பாலியல் தொழிலாளர்கள்


மின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனுமதிக்கப்படாத நிறைய விளம்பரங்கள் மின்சாரவண்டிகளில் பார்க்கலாம். சேல்ஸ் கேர்ள் வாண்டட் என்ற விளம்பரத்திலிருந்து "எங்கள் மசாஜில் உங்களுக்கு முழுத்திருப்தி
கிடைக்கும், வீட்டுக்கு வந்து மசாஜ் செய்ய தனிக்கட்டணம்.."
இத்தியாதி சில விளம்பரங்களைப் பார்க்கலாம்.
இந்த விளம்பரங்கள் பெரும்பாலானவை
(பெரும்பாலானவை.. விதிவிலக்குகள் உண்டு)
பாலியல் தொழில் சார்ந்த விளம்பரங்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும்
உண்மை.

பாலியல் தொழில் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ
தயக்கம் காட்டியதில் சில நியாயங்கள் இருந்தன. நம்மில் பலர் -நான்
உள்பட - ஆண்-பெண் உறவு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம்.
இதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை
என்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது
தனிநபர் சார்ந்த விசயமல்ல.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,
கர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,
அமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை
இந்தியப் பெண்களுக்கு 'ஆஹோ ஓஹோ '
என்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை..
இப்படியாக ஆண்-பெண் உறவு என்பதும் , பாலியல் தொழில் என்பதும்
அரசு கவலையுடன் கவனிக்க வேண்டியதாகி உலகியல் சந்தையாகி
..என்னவெல்லாமோ ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் இவைச் சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும்
சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

மின்சாரரயில்கள் விளம்பரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தப் போது
இதைப் பற்றிய கள ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கும்
மராத்திய எழுத்தாளர், தோழி கவிதா மகாஜன் நிறைய உண்மைகளைப்
பகிர்ந்து கொண்டார்.







*மும்பை காமட்டிபுரம் 1889ல் வெள்ளையருக்காக உருவாக்கப்பட்டது.
1928ல் அரசு லைசன்ஸ் வழங்கப்படது. 1950ல் லைசன்ஸ் ரத்து செய்யப்படது.
100000 பேர் இத்தொழிலில்.


* பாண்டூப் மேற்குப் பகுதியில் சோனாப்பூரில் பாலியல் பெண் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இருப்பிடத்தின் அமைப்பு:
ஒரு நீளமான வராந்தா. கடப்பா கல்மேடை. அந்த கல்மேடைதான் கட்டில்.
அப்பகுதி தகரத் தடுப்புகளால் அறைகளாக மாற்றப்பட்டிருக்கும். அந்த அறைகளில் இருவர் நிற்க முடியாது. கல்மேடைக்கு கீழே பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடந்தைகள். என்ன பெரிதாகா..இரண்டு பைகள் இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 வாடிக்கையாளர்கள் வருவார்கள்
என்கிறார் அந்தப் பெண்.

*பாலியல் தொழிலை நடத்தும் பெண் முதலாளி அந்தப் பெண்கள் கர்ப்பமாக
அனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே அவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஏனேனில் அவர்களுக்கு என்று உரிமை எதுவுமில்லை. அவர்கள் உடல் கூட அவர்களுக்கானதாக இல்லை.
தாய்-குழந்தை என்ற ஓர் உறவு அவர்களுக்கான ஓர் உரிமைச் சார்ந்த
உணர்வாக இருக்கிறது.

*கர்ப்பம் தரித்திருப்பதை அவர்கள் குறைந்தது 5 மாதமாவது மறைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் கர்ப்பம் கலைக்கப்படும்.

* இப்படிக் குழந்தைக்குத் தாயான பெண் ஒருத்தி தினமும் தன்னிடம் மட்டுமே
வரும் வாடிக்கையாளரை ஒரு நாள் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி
இருக்கிறார். வெளியில் வந்தவுடன் வாடிக்கையாளரைக் காணவில்லை.
சிறிதுநேரத்தில் தன் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு
அதிர்ச்சியில் தேடி இருக்கிறார். குழந்தை கல்மேடைக்கு கீழே
கிடைத்தது.. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வழிய.
தொண்டைக்குழி வரை குழந்தைக் காயத்துடன். மருத்துவ உதவிக்கு
போனபோது குழந்தையின் நிலமையைக் கண்ட மருத்துவர் மயங்கி
விழுந்தார்.. !கொடுமையிலும் கொடுமை. நம் கற்பனைக்கு அடங்காத
மிருகக்கொடூரம்.

*ஆண் பாலியல் தொழிலாளர்கள்
-----------------------------------
*மும்பையில் அதிகம் ரேட் வாங்குபவர்கள் இவர்கள்

*விளம்பரம், சினிமா ஆசை என்று வந்தவர்களின் மறுபக்கம் இது.

*ஒரு நாளைக்கு 5000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.

* விடுமுறை நாட்களில் மொரிசியஸ், பாங்காக் என்று அழைத்துச்
செல்லப்படுகிறார்கள். அதற்குத் தனி சார்ஜ் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

* மேல்தட்டு வர்க்க பெண்களுக்கான உடல் தேவையாகவே இவர்கள்
பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே 40 வயதுக்குப் பின்
பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது பிச்சை எடுக்கும் குரூப் லீடரிடம் விற்கப்படுகிறார்கள்.

பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் அத்தொழிலுக்கே
வந்துவிட்டார்கள் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான உண்மை.

மண், பெண்ணுடல், நிறுவனமயம் என்ற புத்தகத்தில் ம.செந்தமிழன்
அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவு வருவதற்கு
முன் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களில் ஒரு சாரார்
ஓர் ஆண்+ ஒரு பெண் சமூக கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தார்கள்
என்றும் அவர்கள் தான் பரத்தையர் என்றும் எழுதி இருக்கிறார்.
இன்று நாம் கொள்ளும் பரத்தையர் - உடலைப் பணத்திற்காக
விற்கும் பாலியல் தொழில் செய்வோர். ஆரம்பத்தில் அப்படி இல்லை
என்கிறார்.

பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. எல்லா நாடுகளிலும்
அனைத்து நாகரிகச் சமுதாயத்திலும் இத்தொழில் தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பாலியல் உறவுகள் குறித்தக் கிளுகிளுப்பும்
சிலருக்கு மிருக உணர்வுகளின் மரபணு தொடர்ச்சியும் இருக்கிறது.
வார, மாத, நாளிதழ்களில் எப்போதும் யாருமே எழுதி அனுப்பாத
மருத்துவர் கேள்வி - பதில் பகுதி வெளிவந்துக் கொண்டுதானிருக்கிறது!
கிட்டத்தட்ட 98% வாசகர்கள் என்னவொ அப்படியே மேம்போக்காக
அந்தப் பக்கத்தைப் புரட்டுகிற மாதிரி பாலியல் சார்ந்த கேள்வி பதில்களை
வாசிக்கத்தான் செய்கிறார்கள்.

அண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள்
அதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. குறிப்பாக தந்தை- மகள்
பாலியல் கொடுமை. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும்
புற காரணிகள் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நன்றி-puthiyamaadhavi.blogspot.com