nanrasithathu.blogspot.com

திங்கள், 21 நவம்பர், 2011

வட்டியும் முதலும்

னித வாழ்க்கையைத் 'துயரங்களின் நகைச்சுவை’ என்றார் சாப்ளின்.

படித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த பஞ்ச் இதுதான். நிஜமாகவே இந்த உலகம், எவ்வளவு பெரிய காமெடிக் கழகம்!

எப்போதுமே துயரத்துக்கும் நகைச்சுவைக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டு இருப்பது ஒற்றைக் கணம்தான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஓர் இரவு... புலியூர் ஹவுஸிங் போர்டில் மூன்றாவது தளத்தில் உள்ள எனது அறைக்குள் நுழைந்தேன். நடுக்கூடத்தில் நெஞ்சில் 'நெஞ்சுக்கு நீதி’யை விரித்துவைத்துப் படுத்திருந்தார் சரவணன் அண்ணன். செருப்பைக் கழற்றிவிட்டு ஓர் அடி எடுத்துவைத்தபோது, காலடியில் தரை இட வலமாக நகர்வதை உணர்ந்தேன். அடுத்த ஸ்டெப்பில் கட்டடமே ஒரு குலுக்கல் போட, பொசுக்கென்று மூளை அலறியது. ''அண்ணே... பூகம்பம்ணே... எர்த்க்வாக்...'' என அலறியபடி வெளியே தவ்வினேன். எனக்கு முன்னால் சிதறிப் பறந்து வந்து விழுந்தது 'நெஞ்சுக்கு நீதி’. அதற்குள் மாடிப் படிகளில் தபதபவென ஓடத் தொடங்கியது கூட்டம். எனக்கு எல்லாமே அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டது. அத்தனை பேரையும் தாண்டி, சைடு ஸ்லாப்பில் சறுக்கியபடி மின்னல் நொடிகளில் தரைத் தளத்தை அடைந்தேன். வெளியே வந்து மூச்சுவாங்கியபோதுதான், தன்னிலை அடைந்து சட்டெனக் கூச்சம் மண்டியது. இரண்டாவது தளத்தில் இருந்த மலையாளக் குடும்பத்தில் மூன்று மோகினிகள் இருந்தனர். மேல் தளத்து பிரம்மச்சாரிகள் போகும்போதும் வரும்போதும் பார்வைகளிலேயே அந்தப் பெண்களோடு வாழ்ந்துவந்தோம். எனக்கு கடைசிப் பெண்ணோடு ஒரு கெமிஸ்ட்ரி ப்ராசஸில் இருந்தது. இந்தப் பூகம்பப் பொழுதில் வீர தீர இளைஞனாக அவர்களை வழி நடத்திஇருக்க வேண்டியவன், இப்படி உயிருக்குப் பயந்து அந்தரத்தில் பறந்து வந்தது எவ்வளவு பெரிய அவமானம்? மனசு பிசைந்தது. படக்கென்று பக்கத்தில் விழித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டேன். கீழே இறங்கி வந்த அந்தப் பெண்களின் அம்மா என்னைப் பார்த்து, ''எந்தா முருகா... உயிருக்கு அவ்வளவு பயமா?'' எனச் சிரித்தார். ''இல்லைங்க... கிரவுண்ட் ஃப்ளோர்ல இந்தக் குழந்தை தனியா நின்னுட்டு இருந்துச்சு... இதைத் தூக்கத்தான்...'' எனச் சொன்னபோது எனக்கே தொண்டை அடைத்தது. மூன்று பெண்களும் கோரஸாகப் பெருஞ்சிரிப்புச் சிரித்தார்கள்!

டி.வி, மிக்ஸி, கம்ப்யூட்டர் என்று கையில் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு முக்கால் நிமிடத்தில் மொத்த ஹவுஸிங் போர்டும் கீழே நின்றது. ஒரு ஆபீஸர் ஜட்டியோடு நின்றார். தெருவெல்லாம் மக்கள் மரண பயத்தில் நசநசத்தனர். பக்கத்து ஃப்ளாட் ரிப்போர்ட்டர் தன் மொபைலில், ''என்னது... இந்தோனேஷியாவுல 1,000 பேர் செத்துட்டாங்களா? 6.2 ரிக்டரா...'' என அப்டேட் கேட்டுத் தன் பங்குங்குப் பீதி கிளப்பினார். ''யாரும் உள்ளே போகாதீங்க... திரும்ப எர்த்க்வாக் வருமாம். ப்ளீஸ் ஸ்டே அவுட் சைட்...'' என அசோஸியேஷன் தலைவர் கத்தினார். அப்போது ஃபுல் மப்பில் வந்த என் ரூம்மேட் சந்திரமோகன், அவன் பாட்டுக்குப் படி ஏறி பால்கனிக்குப் போய், எல்லோருக்கும் கை காட்டிக்கொண்டே ரூமுக்குப் போய்த் தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் வெட்ட வெளியில் செட்டிலானோம். ஒருவர் டி.வி. பெட்டிக்கு கனெக்ஷன் கொடுக்க, சீரியல் ஓட ஆரம்பித்தது. பக்கத்தில் ரம்மி கச்சேரி. வாட்ச்மேன் என்னிடம் வந்து, ''ஆறு மாசமா சம்பளம் ஏத்திக் கேக்கறேன் சார்... எவனும் கண்டுக்கலை. சும்மா மீந்ததைப் போட்டா போச்சா... அதான் பூமி மாதா போட்டுப் பாக்குறா...'' எனத் தன்னளவில் ஒரு கேயாஸ் தியரி சொல்கிறார். விடிய விடிய விழித்துக்கிடந்து, அதிகாலையில் அவரவரும் வீடு மீண்டனர். ''என்ன மாமா... நேத்து நிலநடுக்கம்னதும் டவுச ரோட நின்ன...'' என மறு நாள் அத்தனையும் காமெடியாகிவிட்டது. முன் தினம் பூமி கொஞ்சம் கூடுதலாக அசைந்திருந் தால்... இந்த நகைச்சுவை எவ்வளவு பெரிய துயரம்!

உண்மையில் அபத்தக் காமெடிக ளால்தான் நிறைந்திருக்கிறது நம் வாழ்க்கை. கண்ணீருக்கும் சிரிப்புக்கும் நடுவே நெளியும் ஒரு மின்னலென மாயம் செய்கிறது மனித மனம். சமீபத் தில் டைஃபாய்டு வந்து ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஓரமாகப் படுக்கப்போட்டு, சலைன் சொருகிவிட்டார்கள். நாலைந்து மணி நேரம் வருகிற போகிற நோயாளிகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அப்போது கைக்குழந்தையோடு ஒரு குடும்பம் கதறிக்கொண்டுவந்தது. அந்த அம்மாவுக்கு ஓட்டுப் போடுகிற வயசுதான் இருக்கும். கைலி சட்டையில் கெச்சலாக இருந்த அப்பனுக்கு வயது 20-25 இருக்கும். ஏழைப்பட்ட குடும் பம். குழந்தைக்கு வாணி ஒழுக ஃபிட்ஸ் வந்து இழுத்துக்கொண்டு இருந்தது. ''ஏங்க அறிவிருக்கா..? இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க... வெரி சீரியஸ். இப்போதைக்கு மருந்து தர்றேன்... உடனே சைல்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனாத் தான் ஏதாவது பண்ணுவாங்க. பிள்ளை யைத் தூக்கிப் பிடிங்க...'' என்றபடி டாக்டர் குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது, அந்த அப்பனின் பாக்கெட்டில் இருந்த மொபைல் அலறியது. 'சிங்கத்தை போட்டோல பார்த்திருப்ப, சினிமால பார்த்திருப்ப, டி.வி-ல பார்த்திருப்ப...’ என ரிங்டோனில் சத்தமாக சூர்யா கதறினார். பையன் தடுமாறி போனை ஆஃப் பண்ணும்போது, அந்தப் பெண் அவனை ஒரு முறை முறைத்தாள். அந்தக் காட்சி வாழ்வின் ஆகப்பெரிய துயர நகைச்சுவை. இன்னொரு நாள் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அவருக்கு போன் வந்தது. 'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்றது ரிங்டோன். அவர் எடுத்து, ''ஒரு மீட்டிங்ல இருக்கேன்மா... கூப்பிடுறேம்ப்பா'' என வைத்துவிட்டு என்னிடம், ''ரிங்டோனைக் கேட்டதும் கண்டுபிடிச்சு இருப்பீங்களே... என் வொய்ஃப்தான்னு'' எனச் சிரித்தார். அது சரி... வாழ்க்கையைக் காமெடியாகப் பார்க்காவிட்டால், நம்மில் பல பேர் ஐ.சி.யூ. க்ளைமாக்ஸில்தான் கிடப்போம்!

'சமூகம்’ என்கிற வார்த்தைதான் இருப்பதிலேயே சூப்பர் காமெடி என்பது என் தாழ்மையான அபிப்ராயம். இந்தச் சமூகத்தால் எதுவெல்லாம் மிக சீரியஸாகக் கொண்டாடப்படுகிறதோ... அது எல்லாமே மிகப் பெரிய காமெடிதான். இப்போது உங்கள் ஏரியாவில் யாராவது அப்படியே எம்.ஜி.ஆர். மேனரிஸங்களோடு வாழ்ந்தால், அவரை நீங்கள் எவ்வளவு பெரிய காமெடியனாகப் பார்க்கிறீர்கள்! நண்பர்களில் எவனாவது 'திருமலை’ விஜய் மாதிரி காலரில் இருந்து சிகரெட் உருவினால், அவன்தானே உங்கள் செட்டில் கோமாளி. நாலு பேர் பின்னால் நடக்க, கோட்டு போட்டுக்கொண்டு நீங்கள் அஜீத் மாதிரி ரோட்டில் நடந்துவந்தால் அரெஸ்ட் ஆகி, 'என் விகடன்’ செய்தியாகிவிட மாட்டீர் களா? உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி ஹிட்லரின் உருவம்தானே காமெடிக்கும் மிகப் பெரிய சிம்பல். மம்மர் கடாஃபியின் ஆடை அலங்காரங்கள் செம காமெடிதானே?

''சார்... ஓப்பன் பண்ணா கல்வி அமைச்சர் சார். ஆனா, அவர் பத்தாவது ஃபெயில் சார். கட் பண்ணா... ஆள் மாறாட்டம் பண்ணி பத்தாவது பரீட்சை எழுதும்போது அமைச்சர் மாட்டிக்கிறார் சார்...'' என யாருக்காவது கதை சொன்னால், ''என்னங்க... ஒரு லாஜிக் வேணாமா?'' எனச் சிரிப்பார்கள்தானே... ஆனால், அந்த லாஜிக் இல்லாத காமெடி யைச் சமூகம் எவ்வளவு எளிதாக நடத்திக் காட்டுகிறது? சுப்ரமணியன் சுவாமி, தங்கபாலு, ஜே.கே.ரித்தீஷ் எல்லாம் பயங்கரக் காமெடியன்களாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் காமெடியன்கள் அல்ல... காரியவாதிகள். கோடிகளில் புரளும் அரசியல் முதலைகள். இவர்களைப்போன்ற அரசியல்வாதிகளைக் காமெடியன்களாகப் புரிந்துவைத்திருக்கும் சமூகம்தான், எப்போதும் காமெடி பீஸு. விதவிதமான இலவசங்கள், அறிக்கைகள், லட்டுக்குள் மூக்குத்தி, பால் பாக்கெட்டில் பணம், இட்லிக் கடையில் கரன்ஸிக் கத்தை, சினிமா ஸ்டார்களின் பிரசாரங்கள், பிரியாணி, சரக்கு என ஒவ்வொரு முறையும் தேர்தல்தானே ஜன நாயகத்தின் ஈடு இணை இல்லாத காமெடி யாக இருக்கிறது. விலைவாசியும் லஞ்ச ஊழலும்தானே பத்திரிகைகளில் நாம் அதிகமாக ரசித்துச் சிரிக்கும் ஜோக்குகள்? பெட்ரோல் விலை உயரும்போதும் கலைஞரைச் சந்திக்கும்போதும் மன்மோகன் சிங் எத்தனை காமெடியனாகத் தெரிகிறார். பச்சை கலர், யாகம், ஜோசியம், பூமி பூஜை எனக் கழகங்கள் நடத்தும் காமெடி களை எத்தனை சீரியஸாகப் பார்க்க வேண்டிய கட்டாயம் இந்தச் சமூகத்துக்கு? ஒரே இரவில் சூப்பர் மேனாகிவிட முடியுமா இந்தச் சமூகம்? பறந்து பறந்து அரசியல்வாதிகளின் வீடுகளிலும் சுவிஸ் வங்கியிலும் இருக்கிற மொத்தக் கறுப்புப் பணத்தையும் அள்ளிக்கொண்டு வந்து போட்டால் எப்படி இருக்கும்? இந்த மாதிரியான சமூகக் கனவுகள் எல்லாமே இங்கு காமெடியாக மட்டுமே இருக்க முடியும்!

வடபழனி ரஹத் ப்ளாஸாவில் டி-ஷர்ட்ஸ் தேடிக்கொண்டு இருந் தேன். புது டிசைனில் இருந்த சே குவேரா டி-ஷர்ட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அந்தக் கடைக்காரர் என்னிடம் வந்து, ''சார்... எடுத்துக்கங்க சார். இவரைத்தான் இப்போ எல்லாரும் தேடுறாங்க. மைக்கேல் ஜாக்சனுக்கு அப்புறம் ஹாலிவுட்ல இவர்தான் ஸ்டாரு. ஜேம்ஸ்பாண்ட்லாம் இந்தாளுக்கு அப்புறம்தான்... ம்ம்ம்...'' என்றார். ஒரு கணம் சீமான் அண்ணனுக்கு சேதி சொல்லி, முற்றுகைப் போராட்டம் நடத்தலாமா என யோசித்தேன். கீழே வந்தபோது தரைத் தளத்தில் ஒரு பையன் சே டி-ஷர்ட்டோடு நின்று இயர் போனில் பேசிக்கொண்டு இருந்தான், ''டிஸ்கோன்னா அம்பிகா எம்பயர்தான் சீப்பஸ்ட்... சரி, அவ நிஜமா வர்றேன்னாளாடா?''

ஐயகோ... இந்தச் சமூகத்துக்கு சே குவேரா ஹாலிவுட் நடிகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

எனக்குத் தெரிந்து, இல்லாதப்பட்டவர்கள்தான் சிரிக்கிறார்கள். காமெடியை அனுபவிக்கிறார்கள். இரவுகளில் பிளாட்ஃபார்மில் எஃப்.எம். கேட்டுக்கொண்டு, கறிக் குழம்பு ஆக்கிக்கொண்டு, குடும்பமாகக் கூடிச் சிரிக்கிறார்கள். பர்மா பஜாரில் அம்பதுக்கும் நூறுக்கும் உடல் விற்று, பொக்னா சோறு வாங்கித் தின்னும் மங்கைகளும் திருநங்கைகளும் இந்தச் சமூகத்தை எவ்வளவு காமெடி பண்ணிச் சிரிக்கிறார்கள் தெரியுமா? எப்போதும் வந்த உடனே பொண்டாட்டிக்கு போன் பண்ணிப்பேசி விட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, 'வேலை’யை ஆரம்பிக்கும் ஆபீஸர் களை, வரும்போதெல்லாம் 'ஒரு தலை ராகம்’ பாட்டைப் பாடச் சொல்லி நச்சரிக்கும் எழுத்தாளனை, 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித் துளியும்’ எனக் கவிதை படிக்கும் கவுன்சிலரை, வெளியே வாங்கினா செலவு எனக் கறி எடுத்துவந்து சமைக்கச் சொல்லும் அண்ணாச்சியை... எவ்வளவு காமெடியாக்கிக் கடந்துவிடுகிறார்கள் அவர்கள். பாரில் வந்துபோவோரிடம் எல்லாம் ஓசிச் சரக்கு கேட்டுப் பிச்சையெடுக்கும் மனிதர், எல்லோரும் போய்விட்ட நள்ளிரவில், தெரு விளக்கின் அடியில் உட்கார்ந்து தனியே எதை நினைத்துச் சிரிக்கிறார்?

ஒரு காலத்தில், நாம் துயரங்களோடு கடந்து வந்த ஃபீலிங்குகள் எல்லாமே ஒரு கட்டத்தில் காமெடியாகிவிடுகின்றன. காதலிக்காக கையைக் கிழித்துக்கொண்டது, தூக்க மாத்திரை தின்றது, நண்பனுக்காகச் சண்டை போட்டது, உறவுகளிடம் மல்லுக்கு நின்றது, அலுவலகத்தில் கொந்தளித்தது, எவனுக்கோ சூனியம் வைத்தது... பழி வாங்கத் துடித்தது எல்லாமே காலத்தால் காமெடியாகி நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன!

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிற தோழர் ஒருவரிடம் எரிச்சலாக ஒரு முறை கேட்டேன், ''உனக்கு எதையும் சீரியஸாவே பார்க்கத் தெரியாதா? எதுக்கு எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கே. இங்கே எல்லாமே உனக்குக் காமெடியா?'' அதற்கும் அவர் சிரித்தபடியே சொன்னார், ''சீரியஸாப் பார்க்க ஆரம்பிச்சா... செத்துருவேன்டா!''

அது நம் சமூகத்தின் குரலாகக் கேட்டது!


nandri.. vikatan

திங்கள், 31 அக்டோபர், 2011

அடிப்படை நோக்கம் - மன இயல் (18+)



பசி உணர்வை மிகவும் சாமானியமான ஒன்றாக எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வையோ, ஏதோ மந்திரம், மாயம், பூதம் , பேய் என்பது போல கற்பனை போன போக்கெல்லாம் உருக்கொடுத்து மிரளுகிறோம். மிரள வைக்கிறோம்.


மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்கள் பாலியல் உணர்வை அதன் அடிப்படை நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்துகின்றன.



எந்த பிற உயிரனமும் காதல் - அல்லது காம உணர்வுச் சிந்தனையை ஒரு பிரச்சனையாக எண்ணுவதில்லை.

காதல் - அல்லது காம உணர்வை மனத்திலே ஊட்டிக்கொண்டு பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்துக்கொண்டிருப்பதில்லை.

காதல் தோல்வி காரணமாக மனமிடிந்து நிலைகுலைந்து விட்டதாகவோ - தற்கொலை செய்துக்கொண்டு விட்டதாகவோ பிற உயிரினங்கள் வட்டாரத்திலிருந்து தகவல் கிட்டுவதில்லை.

காதல் பொறாமை உணர்ச்சி காரணமாக படுகொலைகளை நிகழ்வதை மற்ற உயிரினங்களிடமும் காணமுடியாது.

பலாத்காரமாக கற்பழித்தல் போன்ற மோசமான நடைமுறை மனித இனத்துக்கு மட்டுமே உரியனவாக உள்ளன. இத்தகைய இழிதன்மைகள் பிற உயிரினங்களிடம் அனேகமாக இல்லை என்றே கூற வேண்டும்.

பிற உயிரினங்கள் பாலியல் உணர்வு தோன்றும்போது மட்டும் இணையை தேடிச் செல்லுகின்றது. உடலுறவு கொண்டு அந்த உணர்வைச் சமாதானப்படுத்திக் கொண்டு விட்ட பிறகு தன் போக்கில் தம் தம் பணிகளில் ஈடுபடுகிறது.


மனிதன் மட்டுந்தான் அந்த விவகாரத்தை மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகப் பிரச்சனையாக்கி ஒரு குழப்பத்தையே தோற்றுவித்து அந்த குழப்பத்தின் காரணமாக, ஒன்று தானே அழிந்து அல்லது மற்றவர்களை அழிக்க முற்படுகிறான்.

இவ்வாறு பாலியல் உணர்வை ஒரு பிரச்சனையாக்குவதன் காரணமாகத்தான் அந்த விஷயம் மனித இனத்தின் வாழ்க்கை நடைமுறையைச் சீர்குழைந்து அவனைச் சீரழிக்கும் ஒரு பயங்கரமான பலவீனமாகத் தலைதூக்கி நிற்கிறது.

இந்த உணர்வு தான் வாழ்க்கையின் அடிப்படை என்பது போன்று இந்த உணர்வு தொடர்பான சாதனை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பது போலவும் ஒரு வித போலித்தனமான முக்கியதுவம் இதற்கு தரப்படுகின்றது.



இன்று பிரசரமாகும் ஊடகங்களில் பெரும்பான்மை காம உணர்வுக்குத் தூபம் போடுபவையாகவே உள்ளன. திரைப்படங்கள் காம உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் தூண்டுவனவாகவே உள்ளன.விளம்பர சாதனங்கள் எல்லாம் காம உணர்ச்சியைக் கிளறிவிடும் தன்மையிலயே அமைகின்றன.

சுருங்கச் சொன்னால் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கு உலகமுழுவதிலும் மக்கள் தாங்களே திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

அதிலும் இக்காலத்தில் பத்து பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிறுமிகளின் மனம் பாலியல் உணர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது.


பாலியல் உணர்வுகளுக்கு தூபம் போடும் பத்திரிக்கை புத்தங்களைத் திருட்டுத்தனமாகப் படித்தல், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தல் போன்ற விசயங்களில் சின்னஞ்சிறு மாணவர் பருவத்தினரே ஈடுபடுவதாக உலக முழுவதும் உணர்ந்து பெற்றோர் வேதனையும் பீதியும் அடைகின்றனர்.

பத்திரிக்கையிலும், திரைப்படங்கலிலும் "காதல்" என்ற பெயரால் சித்தரிக்கப்படும் காட்சிகளைப் பார்த்துவிட்டு அவற்றையே தங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு மிகவும் குறைவான வயதிலயே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களையும் பலரை நம்மால் காண முடிகிறது.

போலித்தனமான காம உணர்வுகளை 'காதல்' என்ற உன்னதமான பெயரிட்டு அழைத்து அது நிறைவேறாமல் போகும்போது மனமொடிந்து, பித்துபிடித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் கணக்கிலடங்கார்.


இதற்கு காரணம்.. பாலியல் உணர்வு மட்டுந்தான் வாழ்க்கை - இந்த உணர்வு தொடர்பான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுந்தான் மனித வாழ்வின் இலட்சியம் என்ற எண்ணம் புதிய தலைமுறையினரின் உள்ளத்தில் ஊறிக்கிடப்பது தான்.

இது படுமோசமான ஒரு பலவீனமாக அவர்கள் மனதை அரித்துக்கொண்டிருப்பதால்தான் இந்தச் சாதாரண விஷயத்துக்காக வாழ்க்கையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
===================================================================

ஒரு நிமிசம்:

சலனமற்று இருக்க பழகுங்கள். சராசரி மனிதன் ஒரு மாதத்தில் முப்பது நிமிடங்கள் கூட ஆழ்ந்த அமைதியில் கழிப்பதில்லை. ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது தனிமையின் அமைதியை, அதன் அதிர்வுகளை உணரப் பழகுங்கள். அது இதுவரை நீங்கள் உணர்ந்திராத உத்வேகத்தை அறியச் செய்யும்.

சனி, 29 அக்டோபர், 2011

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே உனை மறவேன்,

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.

திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

ஒளி விளக்கு,படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
ண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.

மரபு வழியில் ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.

nandri..settaikaaran.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.


ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.
சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்து கோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவு வலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.

மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண் வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில் செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.

நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமா பற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய் விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு டாஸ்மாக் தேடி போய் விடுகிறார்கள்.

உள்ளே இருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனித உறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்கு அதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில் குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

ஆண்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம் வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்க வாய்ப்புண்டு.

nandri--
http://counselforany.blogspot.com...

சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....




சுதந்திரம்....

ஒரு ஆணுக்கு சுதந்திரம்???
ஒரு ஆணுக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்து யார்??
காந்தியா இல்லை ஜெயலலிதாவா??
ஆம் ஜெயலலிதாவே.
டாஸ்மாக் நாயகி!!! சுதந்திர தேவி!!!
அவிங்க இலேன்னா டாஸ்மாக் இல்ல... சுதந்திரம் இல்ல...

ஒரு ஆணுக்கு சுதந்திரம் என்பது அவன்
பேச்சுக்கு, நடத்தைக்கு,
கட்டுபாடற்ற குடும்ப உறவுக்கு,
தொல்லை இல்லாத பணியிடம் மற்றும் பல பல..
இவை அனைத்தும் கிடைகிறதா என்றால்?? அது தான் இல்லை....

ஒரு ஆணின் மனது இன்னோர் ஆணுக்கு தான் தெரியும்(பெண்ணுக்கும் தெரியும்னு நீங்க நினைக்கிறது mind voicela கேக்குது)
தினமும் ஒருத்தன் குடிக்க போறான்னு சொல்ற மக்களோ குடும்பமோ அவர் ஏன் குடிக்க போறார்னு பாக்குறாங்களா???
இல்லை அவங்களயுடைய கண்ணோட்டம் தினமும் குடிச்சிட்டு வரார்னு தான்...

ஒரு டாஸ்மாக் பார்ல பொய் உக்காந்தா தான் வர ஒவ்வொரு ஆண் மகனின்
உள்ள குமுறல்கள் கேக்கமுடியும்,
அதான் பாரதி அன்னைகே பாடி வச்சிட்டான்
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம் "
"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்னு"
அப்பவே அவர் அவ்ளோ குடும்ப விரக்தியிலே அன்று டாஸ்மாக் இல்லாத்தினால கஞ்சாவின் போதைல எழுதினது
குடும்ப பாரம், குடும்ப அடிமைத்தனம் இதிலிருந்த சிறிது நேரம் விடுபடவே ஆண்கள் டாஸ்மாக் செல்கிறார்கள் என்பது ஏன் கருத்து இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா இப்போ சில பெண்களையும் பாக்கமுடிது அவங்களும் சுதந்திர காற்றை பருக வந்திருகாங்கோ..

சோம பானம், சுரா பானம்னு சொல்றமாதிரி இன்றைய சுதந்திர நாளில் இருந்து இதை சுதந்திர பானம்னு அழைக்கணும்னு உங்கள் எல்லாரயும் சுதந்திரமா கேட்டுக்குறேன்
சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....
---------சந்திரானந்தா

என்ன புள்ள செஞ்சே நீ…

சைட் அடிச்சிருக்கியா…இந்த வார்த்தையை யாரிடமாவது கேட்டு பாருங்கள்..கொஞ்சம் வெட்கித்தான் போவார்கள்..”என்னங்க..இதப்போய் எல்லார் முன்னாடியும் கேட்டுகிட்டு..” என்று திருப்பி கேட்பவர்கள் உண்டு..நண்பன் ஒருவனிடம் கேட்டால் சொல்லுவான்..”மச்சி..சைட் அடிக்காதவன் அரை மனிதன்..” சைட் என்பது “பார்வை” என்று பொருள்படும் என்று ஆரம்பித்தால், போயாங்க..என்று எல்லாரும் சைட் அடிக்கப்போய்வுடுவீர்கள் என்று தெரியும்…

சைட் என்ற வார்த்தை எப்போது தொடங்கி இருக்கவேண்டும் என்று கேட்டால், நம் கல்வெட்டுக்களில் இதற்கான அடையாளம் இருந்ததாய் தெரியவில்லை... எனக்கு தெரிந்தவரை, நான் சின்னபிள்ளையாக இருந்தபோதே, இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.”என்ன மாமூ..சைட்டா..”, “வாடா மச்சி, சைட் அடிச்சிட்டு வருவோம்..”, “மச்சான்..அவ என்ன சைட் அடிக்கிறாடா.” கல்லூரி மாணவர்களி பேவரைட் டயலாக்காக இருந்தது “சைட் அடிப்போம்..” என்ற வார்த்தை..என்னிடம் கேட்டால், சைட் அடிக்கத் தெரியாதவன் குருடன் என்பேன்..

எதிரில் அழகான, அல்லது உங்களை கவரக்கூடிய வகையில் ஒரு பெண் நடந்து சென்றால், ஆட்டோமேட்டிக்காக, உங்கள் பார்வை அந்த பெண்ணின் பக்கம் சென்றால், அதுதான் “சைட்..” நன்றாக கவனிக்கவும்.அதோடு நிறுத்திக்கொண்டால்தான் “சைட்…” இதற்கு மேல் சென்று “எக்ஸ்க்யூஸ்மி…வாட் இஸ் டைம் தி நவ்..” என்று ஆரம்பித்தால், அது “சைட்” டின் அடுத்த கட்டம்..கல்யாணம் ஆனவர்கள், இந்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பது, உடல், பொருள் ஆவிக்கு நலம்..

என் தமிழ்வாத்தியாரிடம் கேட்டால், “போடா தம்பி…சங்ககாலத்திலேயே, சைட் பத்தி விரிவாக சொல்லியிருக்காங்க” என்பார்..தலைவி நடந்து செல்லும்போது, சைட் அடிக்காத தலைவர்களே இல்லையாம்..புராணத்திலேயே சைட் அடித்துள்ளார்கள் என்றால், நாயர் கடையில் டீயும்,வடையும் அடிக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று, பல பொழுதுகள் வியந்ததுண்டு..

திரைப்படங்களில் சைட்டுகள் இல்லாமல், காதல் படங்களே இருக்காது..காதல் என்பது சைட்டோடுதான் ஆரம்பிக்கும்..நாயகி அடிக்கும் முதல் சைட்டுலேயே, எங்கிருந்து வருமோ தெரியவில்லை, நாயகனுக்கு லவ்வு பிச்சுக்கிட்டு வரும். என்னைக் கவர்ந்த திரைப்படத்தில் வந்த ஒரு சைட், காதலுக்கு மரியாதை படத்தில், ஷாலினி, டாக்குடரு விஜய்யை பார்த்து அடிக்கும் சைட்டுதான்..கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் காதல், இவையெல்லாம் கலந்து ஷாலினி ஒரு பார்வை பார்ப்பாரே…யாத்தே..அந்த நேரம் பார்த்து நம்ம மொட்டை சார், “விழியில் விழுந்து, இதயக்கதவு.” என்று ஒரு ட்யூன் போட, அந்த சைட்டே, அதகளமாக இருக்கும்..

பொதுவாக ஆண்கள் மட்டும்தான் சைட் அடிப்பார்களா..பெண்கள் சைட்டு அடிக்க மாட்டார்களா, என்று கேட்டால், உங்களுக்கு இன்றைக்குதான் பல் முளைத்திருக்கிறது என்று அர்த்தம். பெண்கள் அடித்த சைட்டுகள் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கியதும், அடக்கியதுமாய் பல வரலாறுகள் உண்டு. ராமன் வில்லை உடைக்க நடந்து போன்போது, சீதை அடித்த சைட் பற்றி, ஒரு பெரிய பாடலே உண்டு என்று கூறுவர்…”He is handsome” என்று சிம்பிளாக மேலை நாடுகளில் சொல்லிவிடுவர். ஆனால் அந்த வார்த்தையை சொல்லுவதற்கு, நம் கலாச்சாரம் போட்டுள்ள தடையே, பெண்ணடிமைத்தனம்.”அது என்ன, பொம்பளை தெருவுல நடக்கும்போது, தலை நிமிர்ந்து நடக்குறா..ஒருவேளை கேரக்டரு..” என்று சொன்ன கலாச்சாரத்தில் இருந்து சிறிது, சிறிதாக வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ஊர்ப்பக்கங்களில், இன்னும் பல திருவிழாக்கள், சைட்டுக்காகவே சிறப்புறுவதுண்டு..

சைட் என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற நிலை மாறி, “சைட் அடிப்பதற்காகவே, பல மால்களும், கபேக்களும்” கட்டப்பட்டு, வெற்றிகரமாக பணம் ஈட்டப்படுகின்றன. ஆனால், சைட் அடித்தலும், ஒரு அளவுக்குதான்.. பார்க்கும் பெண்ணை எல்லாம் சைட் அடித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுப்பாகி, சைட் இல்லாத தெருக்களில் நடக்க பயப்படும், சைட் அடிக்கமுடியாத பஸ்களில் ஏறமுடியாத நிலை ஏற்படும் என்ற பிரபல மனநல மருத்துவர் அவியிங்க ராசா உரைக்கிறார்..

சைட்டோ, கைட்டோ, “அவ அழகாக இருக்கா” என்பதோடு நிறுத்திக்கொள்வதே நலம்..”அவ என்ன பிரா போட்டிருக்கா..அவ சைஸ் என்ன” என்று அடுத்த கட்டத்திற்கு செல்வது, வக்கிரத்தின் வெளிப்பாடே..அப்படி வெளிப்பட்டால், அந்த சைட்டின் அழகே கேவலப்பட்டு, உங்கள் சைட் பறிபோகும் வாய்ப்பு உண்டு…அட..எங்க போறீங்க..சைட் அடிக்கத்தானே…


nandri--

nandri--

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

காதலை வென்ற காமம்..!

பெண்கள் விடயத்தில்
பெரும் "கலைஞரான"
முகாலய மன்னனுக்கு
மீண்டும் மீண்டும் பசி எடுத்தது!

குடலை நிரப்புவதற்கான
உணவுப்பசியல்ல இது...,
மாறாக
உடல் வேட்கை தணிப்பதற்கானது..!

கண்ணை கவரும் பெண்டிருக்கெல்லாம்
கணவனாக ஆசைப்பட்டான்..,
அவன் தலையில் இருந்த "முடி"
அரச நாட்டு அழகிகள் பலரை
அந்தப்புரத்தில் அலங்கரித்தது..!


சுவைத்து முடிந்தவுடன்
தூர வீசும் பழங்களால்
வீரிட்டு கிளம்பும் அவன் பசி
விரைவில் அடங்கிவிடுமா என்ன?

அரச உடை
அவன் தோல் போர்த்தியிருந்ததால்
அடுத்தவன் பெண்டிர் மீதும்
அவன் கண்கள் பாய முடிந்தது,
அவ்வாறே அகப்பட்டுக்கொண்டாள்
அபலை பெண் மும்தாஜ்;
காமம் கொண்டவனுக்காய்
தன் கணவனை இழந்தாள்!

முகாலயன் பசி போக்கியதால்
பதின்நான்கு கருவுற்று
பின்னொரு நாளில்
அவ்வுடலில் இருந்து பிரிந்தாள்!

பசி தீர்த்தவள்
பாதியிலே போனதால்
மன்னர் மனப்பிரமை கொண்டார்
மரணித்த தன் காமத்தை
காதல் என்ற பெயரில்
கல்லறையாக எழுப்பினார்..!

காமத்தை வென்றவன்
காதல் செய்யான் என்றுணர்த்தும்
ஷஜகானின் அடையாளமாய்
தாஜ்மகால்..!

புதன், 3 ஆகஸ்ட், 2011

யெளவனமான நிலையில் ஏழு ...

இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வித யெளவனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன். கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.

”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”

ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.

ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.

சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?

தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.

”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.

”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.

காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.

”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”

இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?

மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”

யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?

இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள். இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.

பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.

மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

:

:

:

:

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.

புதன், 27 ஜூலை, 2011

கர்ச்சீஃப் காதல்!!!!!!

மக்குப் பிளாஸ்திரிக்கு,
பக்கத்து வீட்டுப் பெண் பணிவுடன் எழுதிக் கொள்வது. நான் எங்கள் வீட்டுக் கொடியில் உலர்த்திய என்னுடைய கர்ச்சீஃப்பைக் காணவில்லை.உங்கள் வீட்டில் தான் யாரோ மறதியாக எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். திருப்பி அனுப்பவும்.
இப்படிக்கு,
அபீதா.
அன்புள்ள அபீத குஜாம்பா அவர்களுக்கு,
கர்ச்சீஃப்பா...யாரிடம் கேட்கிறீர்கள் கர்ச்சீஃப்.. பருத்தி பறித்து வந்தீரா? துணி நெய்து கொடுத்தீரா..?எதற்குக் கேட்கிறீர் கர்ச்சீஃப்? கப்சிப்!!
(பி.கு.: “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை செய்வதால் “மக்குப் பிளாஸ்த்திரி“ என்று என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ என்னைப் பற்றிய “பயோ டேட்டா”)
பெயர் : கணேஷ்.
உயரம் : ஆறு அடி ஒண்ணரை அங்குலம்.
தொழில் : மெடிக்கல் ரெப்.
சம்பளம் : கிட்டத் தட்ட ஆயிரத்து ஐநூறு!
( வாவ் என்று வாயைப் பிளக்காதீர்கள்!)
வயது : இருபத்தி எட்டு
குறிப்பு : இன்னும் திருமணம் ஆகவில்லை :(
அன்புடன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
உங்கள் காயலாங்கடை கட்டபொம்மன் வசனமெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன? ”பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸி”ல் வேலை பார்த்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை என்னுடைய தொலைந்து போன கர்ச்சீஃப்! மரியாதையாய் கொடுத்து அனுப்பவும்!
பி.கு.: அபீதா என்று கெஜட்டில் பெயரை மாற்றி ஐந்து வருடங்களாகி விட்டது.இனியும் பழைய பெயரில் கூப்பிடாதீர்கள்...
விசும்பலுடன்,
அபீதா.
அன்பே அபீதா,
அழாதே! எனக்கு சத்தியமாக உன் பெயர் தெரியாது.உங்கள் வீட்டு வாண்டுப் பயல் தான் அவ்வாறு சொன்னான். நிற்க..எங்கள் வீட்டில் மேற்படி கர்ச்சீஃபை யாரும் மறந்து கூட எடுத்துக் கொண்டு வரவில்லை..திருட்டு குணம் எங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
கணேஷ்.
ஐயோ,
உங்களை யார் இப்போது திருடன் என்று சொன்னது? உங்கள் வீட்டில் எங்காவது தவறுதலாக விழுந்திருக்கும்..கொஞ்சம் தேடித் தான் பாருங்களேன்..ப்ளீஸ்..அன்பே..கின்பே என்று எழுதாதீர்கள்..அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..ஜாக்கிரதை!
எச்சரிக்கும்,
அபீதா.
நச்சரிக்கும் அபீதாவிற்கு,
உங்கள் கர்ச்சீஃப் எங்கு தொலைந்து போயிருக்கும் என்று எனக்குத் தெரியாது..எப்படியும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் (ஸாரி.. டாக்டர்களிடம் பழகி..
பழகி..எதற்கும் இருபத்தி நான்கு மணி நேரம் வாய்தா கொடுத்து பழக்கமாகி விட்டது!)கர்ச்சீஃபைத் தேடித் தருகிறேன். கவலை வேண்டாம்.அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..மன்னியிடம் சொல்லி விடுவேன் என்ற பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. நான் ஒன்றும் சின்ன பப்பா இல்லை!
வீரன்
கணேஷ்.
கணேஷ் என்ற வீரருக்கு,
உங்கள் பிரதாபத்தை எல்லாம் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்..எனக்கு என்னுடைய கர்ச்சீஃப் வந்தாக வேண்டும். அண்ணாவிடம் சொல்ல மாட்டேன்..சும்மா உங்களை பயமுறுத்தினேன்..அவ்வளவு தான்..
இப்படிக்கு,
அபீதா.
அபீதா அம்மையாருக்கு,
கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்....ச்சே!!! எப்பப் பார்த்தாலும் கர்ச்சீஃப் தானா? இவ்வளவு ’சீப்’பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்துக் கொண்டு போனதில் மூக்கை சுவரில் இடித்துக் கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம்..ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......சே!
இனி மருந்துக்குக் கூட உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்!
நஷ்ட ஈடு கோரும் நண்பன்,
கணேஷ்.
கணேஷ் ஸாருக்கு,
மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா? சாரி..மன்னித்துக் கொள்ளுங்கள்..எவ்வளவு கஷ்டம்..ஏதாவது தொலைந்து போனால்,அது கிடைக்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது.கடவாய் பல்லில் மாட்டிக் கொண்ட கடுகு துணுக்கை எடுக்க நாக்கு எவ்வளவு கஷ்டப் படுமோ, அப்படி மனம் கிடந்து அலை பாயும்...பாவம் என்னால் உங்களுக்குத் தான்
எவ்வளவு சிரமம்.
அழுது கொண்டே,
அபீதா.
அபீதா,
கண்டேன் கர்ச்சீஃப்பை! மறுபடியும் அழாதே.இதோ..இதோ...உன்னுடைய கர்ச்சீஃப்பினால் கண்ணை துடைத்துக் கொள்..இதெல்லாம் ஒரு சிரமமா? அது சரி..சார்..மோரெல்லாம் ஒரே தடபுடலா இருக்கு?
அன்பன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
கண்டு கொண்டேன் கர்ச்சீஃப்பை! ரொம்ப சந்தோஷம்..வேறு ஒன்று தொலைந்து போய் விட்டது. கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
குறும்புடன்,
அபீதா.
அம்மா பரதேவதை,
ஆளை விடு..வேறு வீட்டுக்கு குடி மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவி கணேஷ்.
அப்பாவி கணேஷுக்கு,
ப்பூ...இது கூட தெரியவில்லையா..இத்துடன் என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்..
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருவானைக் காவல் ஜோஸ்யரிடம் போய்ப் பார்க்கவும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், நீங்கள் வாடகையே கொடுக்க வேண்டாம், இனிமேல்!
வேறு வீட்டிற்கு குடி போகும் ஆசையை விட்டு விடுங்கள்..உங்கள் சம்பளம் முழுவதும் வாடகையாகவே எடுத்துக் கொண்டு விடுவார்கள்..ஜாக்கிரதை!
என்றும் உங்கள்,
அபீதா.
அபிதா கண்ணிற்கு,
கண்ணே! மக்கு பிளாஸ்திரி என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லி விட்டாய்..
பரவாயில்லை..ஜாதகம் கிடைத்தது.இதோ..இப்போதே ஜோஸ்யர் வீட்டிற்கு போய் விட்டு உன் அப்பாவைப் பார்க்கிறேன், என் அம்மாவோடு! வேறு வேலை?
கிளம்பி கொண்டேயிருக்கும்,
கணேஷ்.

வசீகரமான உன் ஆண்மை....

உனைக் கண்ட முதல் தருணம்
சுற்றம் முழுதும்
வெண்புகையாய் மறைந்து போயின !!!!!
அங்ஙனம் என்னுள் தோன்றியதை
எங்ஙனம் எழுத என எண்ணி
மனதில் உன்னை
எழுதி வைத்தேன் .......

'பார்த்த மாத்திரத்திலேயே காதல் கனியுமா 'என
காவியங்களில் படித்த போது சிரித்த நிமிடங்கள்
இன்று என் நிலை கண்டு சிரிக்கிறதே !!!!!
கண்டதும் காதல் சாத்தியமே என சத்தியம்
செய்யும் அளவு மாறிவிட்டேனே உன்னால்.............

என் குழந்தைத்தனம் ரசிக்கும்
இன்னொரு குழந்தையாய் நீ என்னுள் !!!!
கலைந்த படுக்கையும் நொய்ந்த தலையணையும்
கூறுதே உன் மீதான என் காமத்தை !!

நவரசங்களில்
உனைக் கண்டதும்
வெட்கம் மட்டும்
என் முகத்தில் தலை தூக்குதே !!!!!!

அழகான பெண்கள் கூடத்தான்
கவிஞர்களின் பிறப்பிடம்
ம்ம் !! மறுக்கப் போவதில்லை நான் .,
அடியேனின் பிறப்பிடம்
வசீகரமான உன் ஆண்மை
இதை நீ மறுப்பாயா??????

---கல்பனா

செவ்வாய், 28 ஜூன், 2011

காதல் கணவன்!!!!!!!

காதல் கணவன்!
* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!

* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!

* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?

* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...

* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...

* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...

* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...

* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...

* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...

* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...

* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!

* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!
— ஆர்.சத்யா ராஜசேகர்,

சுதா நீ என்றும்.......




சுதா நீ என்றும்

என் நினைவில் சதா...

நீ மரணிக்க வில்லை

எங்கள் நினைவில்

ஜெனித்து இருகிறாய்..



நீ குடிப்பதை பார்த்து

தண்ணியிலே கண்டம்

தண்ணியிலே கண்டம்

என்றார்கள்

அது கடல் தண்ணி

என்று தெரியாமல் போனதேன்???

ஆழியில் போனாலும்

உன் நினைவுகள்

அழிந்து போயிடுமா என்ன???



வாரத்தின் கடைசி

நாட்களில்மட்டும்

என்னைஅழைக்கவில்லை

உன்ஆயுசின்

கடைசி நாட்களில்தான்

என்னை அழைத்திருக்கிறாய்...



கடலுக்குவேண்டாதது

எல்லாம்துப்பிவிடுமாமே?

உன்னை மட்டும்

மூன்று நாள் "நீ"

புணர்ந்தது

போதும்என்று துப்பிவிட்டதோ??

கடலும் ஓர் தாசி தான்.....



கடவுளின் அற்புதங்கள்

குறைந்து விட்டதை

உன்விடயத்தில் கண்டேன்

இதுபோல் மரண செய்திகளாலும்

துக்க செய்திகளினால் மட்டுமே

இறைவன் பிழைத்த கொண்டிருக்கிறான்...



என் கூட பிறந்தசகோதிறர்கள் கூட

அண்ணா அண்ணா

என்றுஅழகாய் இப்படி

விளித்ததில்லை

என் சகோதிரனுக்கு நீ classmate .......

எனக்கு நீ glassmate ....

சற்று பொறு விரைவில்

இணைவோம் as a heaven mate ...


சுதா நீ என்றும்

எங்கள் நினைவில் சதா...

நீ மரணிக்க வில்லை

எங்கள் நினைவில் ஜெனித்து இருகிறாய்..

----சந்திரா

புதன், 22 ஜூன், 2011

கூரை


நேசித்த என் அருகில்

நீ இல்லை....

உன்னோடு நான் கரைத்த நிமிடங்கள்

என்னுள் கரையாத காவியமாய்....

நீயம் நானும் ஒற்றைக் கூரையில்

வாழ்ந்திட நினைத்தோம்....

ஆனால் - இப்பொழுது

நீ எங்கோ

நான் எங்கோ

இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு ஆறுதல்

ஆகாயம் என்னும் ஒற்றைக் கூரைக்கடியில் நாம் இருவரும்......




திங்கள், 20 ஜூன், 2011

நான் மீண்டும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்

காதல் ஒரு அருமையான உணர்வு, அதை அனுபவித்தவன் மட்டுமே உணரக்கூடிய இனிய வலி.

காதல் எதில் முடிந்தாலும் அது தரும் நினைவுகள் மட்டுமே சாஸ்வதம்.

நிறைய பேருடைய வாழ்க்கையை பல நேரங்களில் வயது வித்யாசமில்லாமல் காதல் தாக்கும், அடித்து வீழ்த்தும், என்ன தான் காதல் முடியுமிடம் காமம் என்று நிதர்சன தத்துவம் பேசினாலும், காதலுடனான காமத்தில் இருக்கும் சுவாரஸ்யமே வேறு.

அதனால் தான் காதலுக்கு வயது ஒரு தடையாய் இருப்பதில்லை.

பல நேரங்களில் செர்ரியின் தித்திப்பைப் போல் காதல் இருந்தாலும், கடைசியில் நெருடும் கொட்டையைப் துப்புவது போல் தான் தோல்விகளும்.

நான் மீண்டும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்

அறிவின் திறவு கோலான அப்பா happy FATHER'S DAY

குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு
குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள். அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது,பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.
தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள்.இளம் வயது பிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்த பின்தான் அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை உணர முடியும்.
இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நான்கு வயதில் குழந்தைகள் : ஆ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.

ஆறு வயதில் அதே குழந்தை : அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.

பத்து வயதில் : ' ஒ..அப்பா நல்லவர்தான்! ஆனால் ரொம்ப முன் கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்து கூட இவருக்கு தெரியவில்லையே! ஹூம்

பன்னிரெண்டு வயதில் : நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்....ஆனால் இப்போது ஏன்................. இப்படி ?

பதினாறு வயதில் : சே! அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை. ச்சீசீ....

பதினெட்டு வயதில் : இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு விபரமே தெரியாதவர்.

இருபது வயதில் : அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ?

இருபத்தைந்து வயதில் : என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா? எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்து கொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.

முப்பது வயதில் : (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்) : அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகளை சமாளித்தாரோ ( ஆச்சிரியம்)

முப்பத்தியைந்து வயதில் : ஒ மைகாட்! வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே !நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப்ப பாரு...வாலுங்க இது

நாற்பது வயதில் : ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசியமாகவே இருக்கின்றது.

நாற்பதைந்து வயதில் : எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டுவந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.

ஐம்பது வயதில் : இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்க்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.

ஐம்பதைந்து வயதில் : அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார். அவரல்லவா மனிதன்.

அறுபது வயதில் : ( கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த மனிதர் யாரும் இருக்கவே முடியாது.



இளைஞர்களே...இளைஞிகளே நாமும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து , குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்யமாட்டார்கள் என்பதையும் மனதில் வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.
நேரம் கிடைத்தால் கிழேயுள்ள வீடியோ க்ளீப்பை பாருங்கள் : ஆனால் பார்க்க தவறாதிர்கள். மனதை தொட்டு செல்லும் ,கண்ணிரை வரவழைக்கும்..பார்த்த பின்பு ஏதோ ஒன்றை இழந்த ஒரு உணர்வு தோன்றும்



இறுதியாக ஒரு வார்த்தை தந்தையர் தினம் என்பது குழந்தை உள்ளவர்களுக்கும் மட்டும் அல்ல. தந்தை ஸ்தானத்தில் இருந்து குழந்தைகளை கவனித்து வரும் எந்த ஆண்மகனுக்கும் உள்ள கொண்டாட்ட தினம் தான். அதனால் உங்களை தந்தை போல கவனித்து வரும் மாமா, அண்ணன், ஆசிரியர் மற்றும் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாம்.

புதன், 15 ஜூன், 2011

ஏற்றுக்கொள்!!!!!!!

காதலனாக வேண்டாம்,

காமுகனாக வேண்டாம்,

கணவனாக வேண்டாம்....உன்

குழந்தையாக ஏற்றுக்கொள்

நான் ஏங்குவதே

உன் அன்பிற்குதானே.......

---சந்திரா

என் வாழ்வு......

கனவில் வாழாதே

நிஜத்தில் வாழு

சொன்னாய் நீ...

நிஜத்தில் வாழ்வதைவிட

கனவில் வாழ்வது

எவ்வளவு சுகமென்பதை

நீ அறியா..

உன்னை பிரிந்த நாள் முதல்

வாழ்கை அப்பிடிதான்

இனிக்கிறது என் வாழ்வு....

--சந்திரா

நீ.........

மனிதனுக்கு

உணவு

உடை

உறைவிடம்

என்ற மூன்று "உ" கள்

முக்கியம்

எனக்கு நான்கு

உன்னையும்

சேர்த்து!!!!!

-----சந்திரா

திங்கள், 6 ஜூன், 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா?

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..!

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!



நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை,இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.

செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும்.

முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.

ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட!

இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.

பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.

மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.

'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்




நன்றி - அவள் விகடன்

புதன், 25 மே, 2011

கலைஞர்க்கு கடிதம்!

ஓய்வறியா சூரியனே! ஒளி குன்றா கதிரோனே!
உட்கார்ந்து கொண்டே வென்றிடலாம் என்றெண்ணிய உத்தமரே!
பார்த்தீரா இந்த பச்சோந்திகளை!
வாரி இறைத்தோம்!
அள்ளிக்கொடுத்தோம்!
பத்தவில்லை போலும் இந்த பரதேசிகளுக்கு!
கொடுத்த காசிற்கு கூவாமல், குத்திவிட்டார்கள் முதுகில்!
என்ன செய்ய இனி?

எதிர் வரிசையில் அமர இடமில்லை!
ஏங்காமலிருக்க மனமில்லை!
காமராசுவை தோற்கடித்து களிப்புற்ற நாம்,
ராசாவாலும் ராசாத்தியாலும் தோற்றுவிட்டோமே!
என் செய்வேன் தலைவா?

திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) -
திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி (தி.மு.க) -
என்றானதன் விளைவைப்பார்த்தீரா?
அன்று,செம்மொழிக்காக தார் பூசினோம்!
இன்று,கனிமொழியால் தார் பூசப்பட்டோம்!
இனம் காக்க தலைநகர்க்கு தந்தி சென்றது!
இருக்கை காக்க நீயே சென்றாய்!
இனத்தைவிட இருக்கை முக்கியமாகிவிட்டது!
என்ன நியாயம் இது?

பதவி தோளின் துண்டாக இருந்த காலம் போய்,
கோவணமாக மாறிவிட்டதோ?
பிறர் பாராட்டிதான் தெரியவேண்டுமா உன் புகழ் உனக்கு?
திரைமுன் முகம் மறைத்து
திரைபின் அகம் விரிக்கும் வேசிகள் - நம் புகழ் பாடவேண்டுமா?
பெரியாரும் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் இதுதானா?
பிச்சைக்காரனுக்கும் பாராட்டு விழா நடத்தும் கூட்டமது!
அதை நம்பி ஏமார்ந்து போனாயே!
காக்கைகள் வந்து போகும் கூடாரமாகிப்போனதோ நம் கழகம்?
சிங்கத்தின் குகை, சிறு நரிகள் கூடுமிடமானதோ?

இனியும் ஒன்றும் குறைந்துவிடவில்லை!
பொறுத்தது போதும் தலைவா! பொங்கி எழு!
கழகம் எனும் சொல்லில் மறைந்துள்ள -
குடும்பம் எனும் கட்டை அவிழ்!

"என் உயிரினும் மேலான உடன் பிறப்பே" என்ற ஒற்றை வரிக்காவே ஏங்கிக் கிடக்கும் உள்ளங்களைப்பார்!
கழகத்திற்காக உழைத்தே காய்ந்துபோன உள்ளங் கைகளைப்பார்!

கழகத்திலுள்ள களையெடு! கலையெடு!
இனம் காண்! தொண்டனிவன்! துதிபாடுபவனிவன் என்று இனம் காண்!
தொண்டனோடு தோள் போடு!
துதிபாடுபவனை தூக்கிப் போடு!
எங்கிருந்து துவங்கினாயோ அங்கேயே சென்றுவிட்டாய்!
மீண்டு வா! மீண்டும் வா! மீட்க வா!

வாழ்த்துகிறேன் உண்மைத்தொண்டனாக!

புதன், 18 மே, 2011

நடை......

அன்ன நடை

விசுக், விசுக்கென துரித நடை

குதித்தோடும் அவசர
நடை
அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை

முலை குலுங்கும் ஓட்ட
நடை
தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை

செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை

ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை

கொட்டாவி விடும் பேரிளம்நடை

வாயால் மூச்சு விடும் பெருத்த நடை

நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை

பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்தி தான்

இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது.

nandri- cablesankar

திங்கள், 16 மே, 2011

சேர்ந்து வாழ்வது( லிவிங் டுகெதர்)

சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?. செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும். என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள். அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.
இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள். கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..

அழுகை

அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும்.

இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..

ஞாயிறு, 15 மே, 2011

ரத்தக் கோப்பை!

இந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான் என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது. நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால் அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான் என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.

அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்டகுறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.

எல்லாவற்றையும்விட, எதை, எப்படி, எவ்விதம்,கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்தசதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.
அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளைமுதலில் செய்து கொடுத்தார்கள்.

ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.
இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.
மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.

ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலைஎன்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறுமுகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்துகொண்டான்.ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களைவைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.

அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை,நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்,மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்,இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.

''வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்கள்மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.

''ஏன்?'' என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி’ என்கிறபுதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.''அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றிகிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொருபுதிய முகமூடியையும் உலகம் வழங்கும்'' என்று பதில் வந்தது.
''அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?'' என்றான்உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.

''அவன் இரானில் இருக்கலாம், சீனாவில் இருக்கலாம்,கியூபாவில் இருக்கலாம், வெனிசுலாவில் இருக்கலாம். அல்லதுவட கொரியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இருக்கலாம்...''

''சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டியஅந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...அந்தக் கொலை சாசனத்தில் இப்போதுகையப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்ஏற்பாடு செய்யுங்கள்'' என்றான் உலக மகா அரக்கன்இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!

புதன், 11 மே, 2011

டம்மி புருஷன் தானா?

டம்மி
புருஷன் தானா?
அத்தான் கவலைப்படாதீங்க. சமையல் எனக்குப் பிரமாதமா வரும். துணி துவைக்கிறது, வீட்டு வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!" "என்ன சொல்றே அப்ப நான் டம்மி புருஷன் தானா?"
(இப்படி ஒரு மனைவி கனவில்தான் வருவா..)


"நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''
(சந்தோஷ செய்தியை தரும் டாக்டர்களும் இருக்கிறார்கள்)



"என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக் கடிதம் வருது ஸார்!" "உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா?" "நேர்ல திட்ட பயந்து என் புருசனே எழுதறார்னு சந்தேகப்படறேன், சார்!"
(பதிவாளர்களுக்கு திட்டி கமெண்ட் ஏதும் வந்தா ஒரு வேளை அவர்களின் மனைவி அல்லது கணவன் அனுப்பிய கமெண்டாக இருக்குமோ?)



"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!" "அப்படியா?" "ஆமாம்...நேத்துகூட துணிமணி துவைக்கும் போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப் போட்டுட்டேன்... அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல...ஹி... ஹி...!"
(மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ் இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை)



"பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க.." "சரி.. அதுக்காக என் அம்மாவை எதிர்த்து தினமும் நீ சண்டை போடுறது சரியில்லை.."
(மனசுக்குள்ள ....நல்லவேளை நாம தப்பிச்சோம்)



மாப்பிள்ளை ரொம்ப சமர்த்துன்னு எப்படி ஒரே ராத்திரியில் கண்டுபிடிச்சே!" "முதலிரவில் பாலை குடிச்சிட்டு செம்பை உடனே கழுவணுமா இல்லை காலையில் கழுவலாமான்னு கேட்கிறாரே!"
(யாரம்மா அது பெட் ரூம் ரகசியத்தை வெளியில சொல்லுரது)



என் சொந்தக்காரங்களை கண்டால் உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கிறதேயில்லை!" "அப்படி சொல்லாதே... உன் தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"
(ஹீ...ஹீ....ஹீ........)



என் மனைவி கூட படுத்தாதான் டாக்டர் எனக்கு தூக்கமே வருது..." "இதுல தப்பு இல்லையே படுத்துக்க வேண்டியதுதான்..." "இதைத்தான் டாக்டர் நானும் சொன்னேன். ஆனா ஆபீஸ்ல யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க"
(தூங்கும் போது யாரும் தொந்தரவு பண்ணவரமாட்டாங்க..ஏன்னா நாம தூங்குரது ராட்ச்சி கூடத்தான)



மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்குஉண்டா?'' ''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!
(இந்த ஆண்களே இப்படிதான் குடும்ப விவகாரத்த வெளியே சொல்லிடுவாங்க)



கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!" "கடைசி நேரத்தல இப்படி சொன்னா எப்படி டாக்டர்! நாங்க எல்லா ஏற்பாடும்செஞ்சுட்டோமே...!"
(ஙே.......}



என் மனைவி பக்கத்து வீட்டுக்காரியோடு எல்லா விஷயத்துலேயும் போட்டி போடுவாள்... அதான் பயமா இருக்கு!" "இதுக்கு ஏன் பயப்படறீங்க?" "பக்கத்து வீட்டுக்காரார் இன்னிக்கு அவர் பொண்டாட்டி கையால நாலு அடி வாங்கினாரு..!" ( எங்க பக்கத்து வீட்டுகாரி சாது அதுனால நான் தப்பிச்சேன்)



இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?" "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."
(இதுக்குதான் மனைவியை ஷாப்பிங் தனியே பண்ண அனுப்ப கூடாது ...)



உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?" "அந்த ஆளையே பிடிக்காது!"
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!" "என் மனைவி 'பாத்திர' காளியாயிருவா!" ( இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து)



என்னது புதிய முயற்சிகளை உன் கணவர் ஊக்குவிப்பதில்லையா?" "ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!"
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே இந்த காலத்தில்)



ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள். திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால், அது அவள் கணவன்தான்.... ஆச்சரியம் தாங்காமல் கண்வனிடம் கேட்டாள்...மனைவி : "என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?"கணவன் : "20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில் கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்"மனைவி : "சரி, அதுக்கென்ன இப்போ?"கணவன் : (அழுதுகொண்டே) "இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்...."

சனி, 30 ஏப்ரல், 2011

பகவான் பாபா!

பகவான் பாபா...
நிலம் புரள -
ஒருநீள அங்கி -
அணிந்து நடந்த -
ஓர்ஆன்ம வங்கி;
இந்த வங்கியின்இருப்பு -
அருள்;பொருள்;அவற்றைக்கொண்டு -
அதுஅகற்றியது -
மன்பதையின்மருள்; இருள்!

'ஓம்’ என்பதுஓரெழுத்து;
அதன் -பதவுரைதான் -
பகவான்பாபா எனும் ஈரெழுத்து;
அந்த -ஈரெழுத்து -
நீரெழுத்து அல்ல;
நிலையெழுத்து;
அதை ஓதிநின்றார்க்கு மாறியது தலையெழுத்து!

பாபா - நம்பவ நோய் தீர்க்க -
விண்ணில் இருந்து -
இந்தமண்ணில் இறங்கிய மருந்து!
ஆம்;
அவர் நமது -நோயைத் தின்ற மருந்து;
அந்தமருந்தைத் தின்றுவிட்டதே நோய்!
அய்யகோ!
அடாத -
இந்தஅக்கிரமத்தைஆரிடம் சொல்லி அழுவோம் போய்?

பிறந்ததுபிறவாதது;
பிறப்பும் இறப்பும்பிரமத்திற் கேது?
வாழ்வில் -அடிபடாத பேர்க்கு -
இதுபிடிபடாது!
பாபா -பலருக்கும் நிழல் பரப்ப...
விரிந்து நின்றவிருட்சம்;
இதன்வேரடி - அந்தஷீரடி!
மகாராஷ்டிரத்தில்மறைந்தது;
ஆந்திராவில்அவதரித்தது;

நீரில்லார்க்குநீரும் -
சோறில் லார்க்குச்சோறும் -
உதவிஉபகரித்தது;
அதையா - காலம்அபகரித்தது?!

புட்டபர்த்தியில் -
ஒரு குடைக் கீழ்புவியைக் கொண்டுவந்து -
கட்டிக் காத்தவர் பாபா;
அதைக்கலைக்கா திருக்க வேண்டும் ரூபா!
----வாலி

புதன், 27 ஏப்ரல், 2011

ஐயையோ ரிசல்ட்..!

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!
பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.
பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?
ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.
"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..
நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.
இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!
மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!
அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.
எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்கமகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!
அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.
பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.
ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.
ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது. பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..
என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..
நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..
திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!
மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன். " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "
என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?
அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.
பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.
அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.
மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.
இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!

---நன்றி விகடன்