nanrasithathu.blogspot.com

திங்கள், 6 ஜூன், 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா?

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..!

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!



நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை,இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.

செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும்.

முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.

ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட!

இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.

பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.

மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.

'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்




நன்றி - அவள் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக