nanrasithathu.blogspot.com

புதன், 25 மே, 2011

கலைஞர்க்கு கடிதம்!

ஓய்வறியா சூரியனே! ஒளி குன்றா கதிரோனே!
உட்கார்ந்து கொண்டே வென்றிடலாம் என்றெண்ணிய உத்தமரே!
பார்த்தீரா இந்த பச்சோந்திகளை!
வாரி இறைத்தோம்!
அள்ளிக்கொடுத்தோம்!
பத்தவில்லை போலும் இந்த பரதேசிகளுக்கு!
கொடுத்த காசிற்கு கூவாமல், குத்திவிட்டார்கள் முதுகில்!
என்ன செய்ய இனி?

எதிர் வரிசையில் அமர இடமில்லை!
ஏங்காமலிருக்க மனமில்லை!
காமராசுவை தோற்கடித்து களிப்புற்ற நாம்,
ராசாவாலும் ராசாத்தியாலும் தோற்றுவிட்டோமே!
என் செய்வேன் தலைவா?

திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) -
திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி (தி.மு.க) -
என்றானதன் விளைவைப்பார்த்தீரா?
அன்று,செம்மொழிக்காக தார் பூசினோம்!
இன்று,கனிமொழியால் தார் பூசப்பட்டோம்!
இனம் காக்க தலைநகர்க்கு தந்தி சென்றது!
இருக்கை காக்க நீயே சென்றாய்!
இனத்தைவிட இருக்கை முக்கியமாகிவிட்டது!
என்ன நியாயம் இது?

பதவி தோளின் துண்டாக இருந்த காலம் போய்,
கோவணமாக மாறிவிட்டதோ?
பிறர் பாராட்டிதான் தெரியவேண்டுமா உன் புகழ் உனக்கு?
திரைமுன் முகம் மறைத்து
திரைபின் அகம் விரிக்கும் வேசிகள் - நம் புகழ் பாடவேண்டுமா?
பெரியாரும் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் இதுதானா?
பிச்சைக்காரனுக்கும் பாராட்டு விழா நடத்தும் கூட்டமது!
அதை நம்பி ஏமார்ந்து போனாயே!
காக்கைகள் வந்து போகும் கூடாரமாகிப்போனதோ நம் கழகம்?
சிங்கத்தின் குகை, சிறு நரிகள் கூடுமிடமானதோ?

இனியும் ஒன்றும் குறைந்துவிடவில்லை!
பொறுத்தது போதும் தலைவா! பொங்கி எழு!
கழகம் எனும் சொல்லில் மறைந்துள்ள -
குடும்பம் எனும் கட்டை அவிழ்!

"என் உயிரினும் மேலான உடன் பிறப்பே" என்ற ஒற்றை வரிக்காவே ஏங்கிக் கிடக்கும் உள்ளங்களைப்பார்!
கழகத்திற்காக உழைத்தே காய்ந்துபோன உள்ளங் கைகளைப்பார்!

கழகத்திலுள்ள களையெடு! கலையெடு!
இனம் காண்! தொண்டனிவன்! துதிபாடுபவனிவன் என்று இனம் காண்!
தொண்டனோடு தோள் போடு!
துதிபாடுபவனை தூக்கிப் போடு!
எங்கிருந்து துவங்கினாயோ அங்கேயே சென்றுவிட்டாய்!
மீண்டு வா! மீண்டும் வா! மீட்க வா!

வாழ்த்துகிறேன் உண்மைத்தொண்டனாக!

புதன், 18 மே, 2011

நடை......

அன்ன நடை

விசுக், விசுக்கென துரித நடை

குதித்தோடும் அவசர
நடை
அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை

முலை குலுங்கும் ஓட்ட
நடை
தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை

செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை

ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை

கொட்டாவி விடும் பேரிளம்நடை

வாயால் மூச்சு விடும் பெருத்த நடை

நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை

பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்தி தான்

இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது.

nandri- cablesankar

திங்கள், 16 மே, 2011

சேர்ந்து வாழ்வது( லிவிங் டுகெதர்)

சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?. செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும். என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள். அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.
இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள். கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..

அழுகை

அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும்.

இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..

ஞாயிறு, 15 மே, 2011

ரத்தக் கோப்பை!

இந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான் என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது. நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால் அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான் என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.

அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்டகுறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.

எல்லாவற்றையும்விட, எதை, எப்படி, எவ்விதம்,கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்தசதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.
அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளைமுதலில் செய்து கொடுத்தார்கள்.

ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.
இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.
மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.

ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலைஎன்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறுமுகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்துகொண்டான்.ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களைவைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.

அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை,நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்,மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்,இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.

''வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்கள்மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.

''ஏன்?'' என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி’ என்கிறபுதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.''அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றிகிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொருபுதிய முகமூடியையும் உலகம் வழங்கும்'' என்று பதில் வந்தது.
''அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?'' என்றான்உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.

''அவன் இரானில் இருக்கலாம், சீனாவில் இருக்கலாம்,கியூபாவில் இருக்கலாம், வெனிசுலாவில் இருக்கலாம். அல்லதுவட கொரியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இருக்கலாம்...''

''சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டியஅந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...அந்தக் கொலை சாசனத்தில் இப்போதுகையப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்ஏற்பாடு செய்யுங்கள்'' என்றான் உலக மகா அரக்கன்இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!

புதன், 11 மே, 2011

டம்மி புருஷன் தானா?

டம்மி
புருஷன் தானா?
அத்தான் கவலைப்படாதீங்க. சமையல் எனக்குப் பிரமாதமா வரும். துணி துவைக்கிறது, வீட்டு வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!" "என்ன சொல்றே அப்ப நான் டம்மி புருஷன் தானா?"
(இப்படி ஒரு மனைவி கனவில்தான் வருவா..)


"நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''
(சந்தோஷ செய்தியை தரும் டாக்டர்களும் இருக்கிறார்கள்)



"என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக் கடிதம் வருது ஸார்!" "உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா?" "நேர்ல திட்ட பயந்து என் புருசனே எழுதறார்னு சந்தேகப்படறேன், சார்!"
(பதிவாளர்களுக்கு திட்டி கமெண்ட் ஏதும் வந்தா ஒரு வேளை அவர்களின் மனைவி அல்லது கணவன் அனுப்பிய கமெண்டாக இருக்குமோ?)



"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!" "அப்படியா?" "ஆமாம்...நேத்துகூட துணிமணி துவைக்கும் போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப் போட்டுட்டேன்... அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல...ஹி... ஹி...!"
(மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ் இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை)



"பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க.." "சரி.. அதுக்காக என் அம்மாவை எதிர்த்து தினமும் நீ சண்டை போடுறது சரியில்லை.."
(மனசுக்குள்ள ....நல்லவேளை நாம தப்பிச்சோம்)



மாப்பிள்ளை ரொம்ப சமர்த்துன்னு எப்படி ஒரே ராத்திரியில் கண்டுபிடிச்சே!" "முதலிரவில் பாலை குடிச்சிட்டு செம்பை உடனே கழுவணுமா இல்லை காலையில் கழுவலாமான்னு கேட்கிறாரே!"
(யாரம்மா அது பெட் ரூம் ரகசியத்தை வெளியில சொல்லுரது)



என் சொந்தக்காரங்களை கண்டால் உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கிறதேயில்லை!" "அப்படி சொல்லாதே... உன் தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"
(ஹீ...ஹீ....ஹீ........)



என் மனைவி கூட படுத்தாதான் டாக்டர் எனக்கு தூக்கமே வருது..." "இதுல தப்பு இல்லையே படுத்துக்க வேண்டியதுதான்..." "இதைத்தான் டாக்டர் நானும் சொன்னேன். ஆனா ஆபீஸ்ல யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க"
(தூங்கும் போது யாரும் தொந்தரவு பண்ணவரமாட்டாங்க..ஏன்னா நாம தூங்குரது ராட்ச்சி கூடத்தான)



மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்குஉண்டா?'' ''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!
(இந்த ஆண்களே இப்படிதான் குடும்ப விவகாரத்த வெளியே சொல்லிடுவாங்க)



கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!" "கடைசி நேரத்தல இப்படி சொன்னா எப்படி டாக்டர்! நாங்க எல்லா ஏற்பாடும்செஞ்சுட்டோமே...!"
(ஙே.......}



என் மனைவி பக்கத்து வீட்டுக்காரியோடு எல்லா விஷயத்துலேயும் போட்டி போடுவாள்... அதான் பயமா இருக்கு!" "இதுக்கு ஏன் பயப்படறீங்க?" "பக்கத்து வீட்டுக்காரார் இன்னிக்கு அவர் பொண்டாட்டி கையால நாலு அடி வாங்கினாரு..!" ( எங்க பக்கத்து வீட்டுகாரி சாது அதுனால நான் தப்பிச்சேன்)



இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?" "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."
(இதுக்குதான் மனைவியை ஷாப்பிங் தனியே பண்ண அனுப்ப கூடாது ...)



உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?" "அந்த ஆளையே பிடிக்காது!"
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!" "என் மனைவி 'பாத்திர' காளியாயிருவா!" ( இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து)



என்னது புதிய முயற்சிகளை உன் கணவர் ஊக்குவிப்பதில்லையா?" "ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!"
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே இந்த காலத்தில்)



ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள். திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால், அது அவள் கணவன்தான்.... ஆச்சரியம் தாங்காமல் கண்வனிடம் கேட்டாள்...மனைவி : "என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?"கணவன் : "20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில் கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்"மனைவி : "சரி, அதுக்கென்ன இப்போ?"கணவன் : (அழுதுகொண்டே) "இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்...."