nanrasithathu.blogspot.com

திங்கள், 6 டிசம்பர், 2010

"உயிர்க்க விடு"...!

"உயிர்க்க விடு"...!



கண்மணியே....!
காட்டுத் தீயாய்... எனைப்
பற்றி எரிக்கும் உந்தன் மீதான
காதல்....!
உன்னை மட்டும் "தீண்டாமல்"
போவதெப்படி....?

காதலே...!
கழனி உழுதவனை...
கவிஞனாக்கும் வல்லமை
உனக்கு உண்டெனில்....
கரையா கல்நெஞ்சக்
காதலி...!
அவள் இதயம் புக
உன்னாலாகாதா...?

உருகிய இரும்பாய்...
உருகும் இதயமே....!
உன்னவளிடம் ...
உன் காதல் சொல்ல....
உள்வாங்கும் மர்மமென்ன...?

என்னை மொய்க்கும் காதல்
உன்னை மொய்க்காதோ...!
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகள்....!
உனக்குள் புதையாதோ...!

உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்....
சொல்லத் துடிக்கும்
உதடுகளின் உயிர்ப்பை
மரணிக்க செய்யும் காரணம் எது...?

என்னில் நிலைக் கொண்ட
காதல் புயலே...! ஒன்று
கரை கடந்து விடு...! இல்லை
கரை கடக்க விடு...!!
"மையம்" அசையா
மாயம் என்ன...?

யாதுமாகி என்னில்
பூத்திட்ட உயிர்ப் பூவே...!
உன்னை சுவாசிக்கிறேன்...!
உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!

இன்னும் எத்தனை நாள்
இப்படி... ?!

சொல்லாமலே....!!!
 
 
nandri- ithayasaaral.blogspot.com

புதன், 24 நவம்பர், 2010

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............

இந்த நாட்டுல பேசுறதுக்கு கூட யாரும் தயாரா இல்லப்பா. எல்லாரும் துட்டு, துட்டு என்றே சொல்லிட்டு இருக்காங்க. ஆணும் பெண்ணும் தீயா வேலசெய்ரானுங்கப்பா. சம்பாதிக்கறது சந்தோசமா வாழறதுக்கு மட்டும் தான்னு இவங்கள பாத்தா தெரிஞ்சிக்கலாம்
சரி வாங்க விஷயத்துக்கு போவோம்(நீங்க வரிங்களோ இல்லையோ நான் தீயா போயிட்டு இருப்பேன்

மிருகத்துக்கும் மனுசனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் உடை மட்டுமே
(
பார்வையில்)

என்ன மிருகம், சேமிப்பு என்ற போர்வையில் நாலு தலமுறைக்கு சேர்த்து வைக்க நினைக்கிறது இல்ல. மனுஷன் அப்படி கிடையாது, முடிஞ்சவரைக்கும் தனக்கும் தன்னுடைய எதிர்கால சந்ததிகளுக்கும் சேமிச்சி வச்சிட்டு போறான்

நான் பார்த்தவரைக்கும் நம்ம இந்தியருங்க மட்டும் தான் குடும்பம் பத்தி ரொம்ப கவல படறோம். மேலை நாட்டவரும் மற்றும் பல ஆசிய நாட்டு மக்களும் இந்த விஷயத்துக்காக ரொம்ப சிரத்தை எடுத்துக்கறது இல்ல


நம்மூர்ல தான் 50 வருசமா உழைச்சி அந்த செல்வத்த தன் புள்ளைங்களுக்கு கொடுத்துபுட்டு பெரியவங்க வீடு வாசல் இல்லாம தெருவிலேயோ, இல்ல எதாவது முதியோர் காப்பகதுலையோ  கெடக்கறாங்க. ஏன் இந்த கஷ்டம் நமக்கு. தன் புள்ளைங்க வாழ்கைய நெனச்சுக்கிட்டு பல பேரு எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம, காச சேர்த்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத மட்டுமே தங்களோட வாழ்கையின் லட்சியமா வெச்சி வாழறவங்க நம்ம மக்கள் தான்

இது மாறனும் ஒரு பக்கம் அநியாயத்துக்கு குடும்பத்த பத்தி கவலப்படாத மக்கள், இன்னொரு பக்கம் குடும்பம்கர கோயில மட்டுமே நினைச்சிகிட்டு சோறு தண்ணி இல்லாம நாளும் தன்ன வருத்திக்கிற மக்கள்.

 
என்னதான் பையனுக்கும், பொண்ணுக்கும் செஞ்சி வச்சாலும் நமக்கு என்னோமோ நல்ல கதி இல்ல.  முடிஞ்சவரைக்கும் நமக்கு கிடச்ச இந்த மனுச பய வாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்

“பேக்கட்டுல பத்து காசு இல்லேனா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க


இந்த சிங்கம் வாழ்கை, சிங்கம் வாழ்கைன்னு சொல்வாங்க. அதாங்க நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க


சிங்கம் ஒரே இடத்துல இருக்கும் அதோட துணை தான் உணவுக்காக அலைஞ்சி எடுத்துட்டு வந்து அதுக்கிட்ட  வச்சிட்டு வைட் பண்ணும். ராசா சாப்பிட்டு முடிச்சப்புறம் தான் துணை சாப்பிடும்.

நம்ம கதைய பாருங்க. என்ன தான் நாம சம்பாரிச்சாலும் கடைசில நமக்கு கிடைக்குறது என்ன

“கடைசில நாமெல்லாம் வால்மீகிதான்

என்ன தான் நம்ம குடும்பத்துக்கு செஞ்சாலும் கடைசில சொல்லுவாங்க பாரு ஒரு வார்த்த, அந்த வார்தைகாகதான் நாம பாடுபடறோம்.

அதுதான் "கடமை"

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா - கடமைய ஆற்றுங்க ஆனா உங்க கடமையே உங்கள எதிர்காலத்துல காப்பாத்தும் அப்படிங்கற நினைப்ப தூரம் போட்டுட்டு உங்களுக்காகவும் கொஞ்சம் சேமிச்சி வச்சிக்கோங்க.

எதிர்காலத்துல பையனும், பொண்ணும் உங்களுக்கு டாட்டா காட்டிட்டு போனப்புறம் அத வச்சி சந்தோசமா வாழ பழகிக்கங்க

ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற உங்க மனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி) மட்டுமே நிஜம். மத்ததெல்லாம் "passing clouds". 

குழந்தைங்க மேல அன்பு வைங்க ஆனா அவங்கதான் நம்ம எதிர்காலம் அப்படிங்கற எண்ணம் வைக்காதீங்க

நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காம அவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழ விடுங்க

கனவு மெய்பட வேண்டும்

"வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் அதுல இந்த வாலிபம் கொஞ்ச நேரம் தான்"
 
 
nandri--vikkiulagam.blogspot.com

சனி, 6 நவம்பர், 2010

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2



நேற்று பத்து நிமிடம்
தாமதமாய் வந்தேன் என்பதற்காக
நீ கொடுத்த இந்த தண்டனை
மிகக்கொடியது....
இப்போதாவது இந்த உலகம்
புரிந்து கொள்ளட்டும்
நீ எவ்வளவு பெரிய
கொடுமைக்காரி என்பதை.......





பூக்களிடம் சண்டையிட்டு
முட்கள் ஆனந்தமாய் தோற்கும்
அதிசய இடம் இது



எனக்கெதிராய் நீ
கத்தி பிடித்தால் கூட பரவாயில்லை.
சமாளித்துவிடுவேன்.
ஆனால் கட்டிப்பிடித்தல் என்ற ஆயுதத்தை
வைத்துக்கொண்டு நிற்கிறாயே.
இனி என்ன செய்ய முடியும் என்னால்?


நீ சூடும் மலரில் அனைவருக்கும்
கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.




விழி வழியே மட்டுமின்றி
விரல் வழியேயும்
காதல் மின்சாரத்தை கடத்தும்
அதிசய மின் கடத்தி நீ




நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்.

nandri- kavithaikadhalan

 

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை"
என்ற பாடலை கேட்கையில் சிரித்து கொள்வேன்.
அது எப்படி கற்கள் காலுக்கு மெத்தையாகும் என்று?..
உன்னுடன் ரயில்வே தண்டவாளத்தில்
நடந்து செல்கையில்தான் அந்த பாடல்
எந்த அளவிற்கு உண்மை என்று உணர்கிறேன்....



தயவு செய்து இவ்வளவு அருகில்
என்னிடம் வராதே. அப்புறம்
"ச்சீ.. போடா... நீ ரொம்ப கெட்ட பையன்" என்று
நீ என்னை திட்டினால்
அதற்கு நான் பொறுப்பல்ல....



நான் உனக்கு
என்ன பரிசு கொடுத்தாலும்
அது அத்தனையிலும்
என் காதல் மட்டுமே நிரம்பி இருக்கும்


எப்போதோ வெட்டி எடுக்கப்பட்ட
மரத்துண்டிலிருந்தும் பூக்கள் பூக்கிறது,
நீ அதை கட்டிப் பிடித்து நிற்கையில்....

நீ எனக்கு கொடுக்கும் பறக்கும் முத்தத்தில்
கலந்திருக்கும் காற்றை மட்டுமல்ல
காதலையும் என்னால் மட்டுமே
உணர முடியும்.

என்னை கட்டிப்பிடித்து நடக்கும் போது
ஏன் தள்ளாடுகிறாய்? என்று கேட்கிறாய்.
நீ என்றைக்காவாது மது அருந்தி, நடந்து பார்...
பிறகு தெரியும்.

யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்?
 
 
nandri- kavithaikadhalan

உன் காதலால் பிழைக்கும் என் தனிமை

உன் காதலால் பிழைக்கும் என் தனிமை












                        nandri- kavithaikadhalan

நேற்று இறந்து விட்டேன்

நேற்று இறந்து விட்டேன்


சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...



என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.
 
nandri, kavidhaikaadhalan

புதன், 3 நவம்பர், 2010

உன் அணைப்பினால் அழகாகிறேன்

உன் அணைப்பினால் அழகாகிறேன்


மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும்.

எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.

இருவரும் அணைத்தபடி
படுத்திருக்கும் சுகத்தைவிட,
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
எனக்கு எதிர்புறமாய் திரும்பியபடி
படுத்திருக்கும் நேரத்தில்,

மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.
அப்போது மெதுவாய் உன் விரல்கள்
என் விரல்களை
சிறைப்பிடித்துக் கொள்ளும்.

அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.

உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.

எனக்கு தேவை
உன் முத்தங்கள்தான்.
ஆனால் அதை நேரிடையாக கேட்பதைவிட,
உன் அணைப்பை மட்டும்தான் கேட்பேன்.
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் என்பது போல்,
நீ உன் அணைப்போடு சேர்த்து
உன் முத்தங்களையும்
இலவசமாக தருகிறாய்.

நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கத்தைவிட,
கனவுகளைவிட,
உன் அணைப்பையே
அதிகம் விரும்புகிறேன்

நீ மட்டும் என்னை
அணைத்து கொண்டு இருப்பாயேயானால்
ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்
 
nandri- kavithai kadhalan

உணர்ச்சிக் கவிஞர் ''காசி ஆனந்தன்'' கவிதைகள்

உணர்ச்சிக் கவிஞர் ''காசி ஆனந்தன்'' கவிதைகள்


முரண்..இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்

பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்


வெறி..எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .


சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.


நிழல்..எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

போர்..ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

மானம்..உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

அறுவடை..திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…நீ என்றேன்
கைதட்டினான்

பெண்..ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

கோடை..தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.

திமிர்..வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன

கொலை..ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்..அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி..மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி ..

கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்..எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி..மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்..உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை..உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு..புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்..பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்..காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை..கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!

பால்..என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்..என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.

தேர்தல்..மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

ஏழ்மை..சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்..செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்

மண்..என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

குடுகுடு..நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்

நியூட்டனின் மூன்றாம் விதி...

நியூட்டனின் மூன்றாம் விதி...

பிரிவின் வேதனை சுடுகிறது
என்பவனுக்கு
பிரிவின் பின்னர்தான்
திளைக்க திளைக்க
நினைவில் நனைகிறேன்
என்பதை எப்படி புரியவைப்பேன்..

நிராகரித்தலின்
வேதனையை அனுபவித்ததுண்டா
என்பவனிடம்
எப்படி பகிர ..
ஒரு
நிராகரித்தலின் பின்தான்
திகட்ட திகட்ட
அன்பை சுவைப்பதை...

எனக்கு மட்டும்
ஏன்
இப்படியெல்லாம் நிகழுது
என்றவனுக்கு
எல்லாவற்றிலும் மீண்டஅனுபவத்தை
எப்படி விளக்குவேன் ..?

ஐய்யகோ!..
புலிகளை அழித்துவிட்டனரே..!
கதறி துடித்த தோழனுக்கு
தெரியவில்லை
பதுங்கி பாய்வதுதான்
புலிகளின் குணமென்று....!!!

கொத்து குண்டுகள்
மொத்தமாய் போட்டவனுக்கு
யாரும் சொல்லவில்லையா
நியூட்டனின் மூன்றாம் விதியை..?
 
nandri- krpsenthil