Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2
நேற்று பத்து நிமிடம்
தாமதமாய் வந்தேன் என்பதற்காக
நீ கொடுத்த இந்த தண்டனை
மிகக்கொடியது....
இப்போதாவது இந்த உலகம்
புரிந்து கொள்ளட்டும்
நீ எவ்வளவு பெரிய
கொடுமைக்காரி என்பதை.......

பூக்களிடம் சண்டையிட்டு
முட்கள் ஆனந்தமாய் தோற்கும்
அதிசய இடம் இது
எனக்கெதிராய் நீகத்தி பிடித்தால் கூட பரவாயில்லை.
சமாளித்துவிடுவேன்.
ஆனால் கட்டிப்பிடித்தல் என்ற ஆயுதத்தை
வைத்துக்கொண்டு நிற்கிறாயே.
இனி என்ன செய்ய முடியும் என்னால்?
நீ சூடும் மலரில் அனைவருக்கும்கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.
விரல் வழியேயும்
காதல் மின்சாரத்தை கடத்தும்
அதிசய மின் கடத்தி நீ
nandri- kavithaikadhalan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக